annualReports

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் வருடாந்த அறிக்கை

ம.து.ம.ச கௌரவ செயலாளரின் அறிக்கை
அன்புள்ள செயற்குழு உறுப்பினர்களே, ம.து.ம.ச. ஆதரவாளர்களே!

மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் 20வது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்தும் இவ்வேளையில் உங்களின் மேலான கவனத்திற்கு சங்கத்தின் 2011/2012 செயற்பாட்டு அறிக்கையையும் 2010/2011 கணக்காய்வு அறிக்கையையும் சமர்ப்பிப்பதில் ம.து.ம.ச. செயற்குழு பெருமையடைகின்றது.

சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 1985ம் ஆண்டு தொடக்கம் 2010வரை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்தவர்களுக்கும், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பல்வேறு நிறுவனங்களும் ஆதரவாளர்களும் பெரும் மனதுகொண்டு எமக்கு நிதி வழங்கியதை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

2011/2012ல் போர் நிறைவுற்றதின் பின் எமக்கு நிதி வழங்கும் ஸ்தாபனங்கள் ஆதரவாளர்கள் போன்றோரின் தொகை பெருமளவில் குறைவடைந்தது. தலைவரின் வழிகாட்டலின் கீழ் எமது கையிருப்பில் உள்ள பணத்தைக் கொண்டும், ஓர் சில நலன்விரும்பிகளின் ஆதரவுடனும் துயர்துடைப்புப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள், கல்விப் பணி, பொதுப்பணி எனப் பல்வேறு பணிகளை உங்களின் ஒத்துழைப்புடன் செயலாற்றியதை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

இச்சங்கத்ததிற்கு நிதியைச் சேகரிக்கும் முகமாக பல வழிகளில் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக தலைமைக் காரியாலயத்தை வாடகைக்கு விட்டும், தேவையற்ற வாகனங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், போன்றவற்றை ஏலத்தில் விற்றும், கொடிதினம் மூலமாகவும், இடம்பெயர்ந்த மன்னார் வாசிகளின் மூலமாகவும், புதிய நிறுவனங்களை அனுகுவது மூலமாகவும் நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்;ட சிறார்களின் கல்;விக்காக பெரும் நிதியை ஒதுக்கியுள்ளோம். அடுத்து நலிவுற்ற மக்களுக்காக குறிப்பாக தற்காலிக கொட்டகை, மலசல கூடம், விதவைகள் வாழ்வாதார உதவித் திட்டம், அனாதை மாணவர்கள் ஊக்குவிப்பு, ஊனமுற்றோருக்கான உதவி, காணாமல் போனவர், கைதுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உதவி போன்றவற்றிற்கு இரண்டாவது பகுதி நிதியை ஒதுக்கியுள்;ளோம்.

எமது இரண்டு வருட சேவைகளை கூடியவரை இலகுபடுத்தி உங்கள் பார்வைக்காக வழங்கியுள்ளோம்.
புதிய செயற்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து 28வது வருடத்திலிருந்து இச்சங்கம் மூலம், பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நிரந்தரமான மறுவாழ்வைப் பெற்றுக் கொடுப்பார்கள் என நம்புகின்றோம்.

கடந்த காலத்தில் எமக்கு ஆலோசனை வழங்கிய கௌரவ போசகர்களுக்கும், இருண்ட யுகத்தில் மன்னாரில் இருந்து பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மூடப்பட்டும், ஒருசில ஸ்தாபனங்கள் இயங்க முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டபோதும், எமது சங்கத்தை துணிந்து வழிநடாத்திய எமது கௌரவ தலைவர் வண.பிதா.அ.சேவியர் குரூஸ் அவர்களுக்கும், ஆர்வமுடன் செயற்குழுக் கூட்டங்களில் பங்குபற்றி, எமது குறை, நிறைகளை எடுத்தியம்பிய செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஏனைய அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளிலுள்ள பரோபகார இலங்கையர்களுக்கும், வெளிநாட்டு வாசிகளுக்கும், இலங்;கையிலுள்ள வெளிநாட்டு தூதராலயங்களுக்கும், இவ்வறிக்கையைத் தயாரிக்க உதவிய சகலருக்கும் செயற்குழு சார்பில் நன்றி கூறிக்;கொள்கின்றேன்.

துயர் துடைப்பு பணிகள் விபரம் – தமிழில் வசிக்க இங்கு அழுத்தவும்  MARR AGM 2012 Report 10.07

 

நன்றி.

திரு.சின்கிளேயர் பீற்றர்
கௌரவ செயலாளர். ம.து.ம.ச.