அன்புப் பணியில் 50 ஆண்டு நிறைவெய்திய அருட்தந்தை.அ.சேவியர் குருஸ் அடிகளார்
யாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் தலைமைதாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட குருமார்கள், 50 க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிகள், அரச, அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், வங்காலை பொதுமக்கள், உற்றார், உறவினர்கள் பலர் புடைசூழ தமது 50 ஆவது குருத்துவபட்ட நிறைவுவிழாவை மன்னாரில் உள்ள குருக்களின் இரத்தம் தோய்ந்த வங்காலை மண்னில் 20-12-2012 ல் நன்றிப்பூசையுடன் வணபிதா சேவியர் குருஸ் அடிகளார் நிறைவேற்றினார். யாழ் ஆயர் அதிவந்தனைக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தமது சிறப்புரையில், யாழ்,மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 50 வருடங்களாக மிகத் துணிச்சலுடனும், துடிப்புடனும், இறைபக்தியில் அவாவுடனும், திருச்சபை
தலைமைத்துவத்திற்கு அமைச்சலுடனும், சகலரையும் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவராகவும், இளம் குருக்களுக்கு ஆண்மீகத் தந்தையாகவும் அருட்தந்தை வாழ்ந்து காட்டினார் என புகழாரம் சூட்டினார். அவரின் முன்மாதிரிகையை அவரினால் உருவாக்கப்பட்ட இளம் குருக்கள் கடைப்பிடிக்க வேண்டும்மென வேண்டுகோள் விடுத்தார். மன்னார் ஆயர் அதிவந்ணைக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை தலைமையுரை ஆற்றுகையில் விழா நாயகன் சேவியர் குருஸ் அடிபாளாரின் கீழ் தான் உதவிப்பங்குத் தந்தையாக கடமையாற்றியதாகவும,; அக்காலத்தில் வடக்கு கிழக்கில் யாழ் மறைமாவட்டம் மாத்திரம் இருந்ததாகவும், அவரின் கடமையுணர்வையும், ஒழுக்கத்தையும் தான் நன்கு அறிந்திருந்ததாகவும்; அவர் சிறப்புற சேவையாற்றியமைக்கு இவரின் பொற்றோர்கள் முக்கிய காரணமாக இருந்தமையினாலும், யாழிலிருந்து மன்னார் புதிய மறை மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், குரு முதல்வாராக சிறப்பாக சேவையாற்றியதாகவும், அத்துடன் மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய குருமடம் ஒன்றை சிறிதாக
ஆரம்பித்து, தற்போது “மடுமாதா சிறிய குருமடம்” என வளர்ந்துள்ளதாகவும், மன்னாரில் சுமார் 25 குருக்களை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும் எனவும் புகழுரைத்தார். மேலும் ரோமை நகரில் 20-12-1961ல் அடிகளாருடன் குருப்பட்டம் பெற்ற வணபிதா நீ.சவிரிமுத்து (மரியசேவியர்) இயக்குனர், திருமறைக்கலா மன்றம், மட்டு-திருமலை ஆயர் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை, மறைந்த முன்னாள் யாழ் மூத்த குரு வணபிதா ஆ.நு.பயஸ் அடிகளார் போன்றோர் இவ்விழாவில் நினைவு கூரப்பட்டனர். 1985ஃ08ஃ06ல் மன்னார் துயர் துடைப்பு மறவாழ்வுச் சங்கத்தை ஏற்படுத்தியதுடன் மக்களின் துயர் துடைப்புப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இற்றைவரை அதன் தலைவராக இருந்து வருகின்றார். பிரiஐகள் குழுவின் தலைவராகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள் சங்க தலைவராகவும், போர்; நிறுத்த (ளு.டு.ஆ.ஆ.)கண்காணிப்புக் குழுவில் ஓர் உறுப்பினராகவும், மடுமாதா சிறிய குருமடத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றியதை இவ்விழாவை ஏற்பாடுசெய்த வங்கநகர் பங்குத் தந்தை வண பிதா nஐயபாலன் அடிகளார் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இறுதியில் விழாநாயகன் வணபிதா சேவியர் குருஸ் அடிகளார் தான் கடந்துவந்த 50வருட குருநிலையை எடுத்துக்கூறி இறைவன் திராட்சை தோட்டத்தில் பணிபுரிய தமக்கு பாக்கியம் கிடைத்ததை எண்னி மகிழ்ந்தார். வங்காலை பங்கு மக்களும், மன்னார் துயர் துடைப்பு மறவாழ்வுச் சங்கத்தினரும், யாழ் மாட்டீன் சிறிய குருமட அதிபரும் அடிகளாருக்கு பொன்னாடைபோர்த்தி, வாழ்த்துபா பாடி புகழராம் சூட்டினர். தகவல் திரு.சின்கிளேயர் பீற்றர ம.து.ம.ச. செயலாளர். 21-12-2011
Reported by Mr. Peter Sinclair,
General Secretary, MARR.
Mannar Association for Relief & Rehabilitation No. 05, Main Street, Mannar, Sri Lanka.
Mobile: 0094 (0)71-594-5825
E-Mail: petsinclair@gmail.com (Personal)
marrmannar@gmail.com (Official)