Tag Archives: Meththa Artificial Limps

Meththa Artificial Limps

பிறருக்கு உதவுவதில் ஆர்வம்கொண்ட மன்னார் “மெத்தா செயற்கை உறுப்புக்கள்” பொருத்தும் நிலையம்

மன்னார் வைத்தியசாலையில் கடந்த 2009 ஐப்பசி தொடக்கம் இற்றைவரை மெத்தா செயற்கை உறுப்புக்கள் பொருத்தும் நிலையம் 10 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் அரும்பணி ஆற்றிவருகின்றது. இற்றைவரை 1132 பயனாளிகளுக்கு பொய்க்கால், பொய்க்கை, போலியோ உறுப்புக்கள், , செயற்கை சார்பு உறுப்புக்கள், நடமாடும் கருவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவற்றை செய்துவருகின்றது. மேலும் வன்னிப் பகுதியில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட முல்லைதீவு, கிளிநொச்சி, மாங்குளம், ப+நகரி, வவுனியா போன்ற இடங்களில் வைத்தியர்களை கொண்ட நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றது. இதுவரை 534 பயனாளிகள் இந்நடமாடும் சேவையினால் பயன் பெற்றுள்ளனர். இதில் 30 விழுக்காடு குடும்ப பெண்கள், யுவதிகள், இளையோர், பாடசாலை சிறார்கள், குழந்தைகள், அரச ஊழியர்கள் போன்றோர் அடங்குவர். இம்மாதம் 15,16,17ந் திகதியில் முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள மீனவ சங்க கட்டிடத்தில் வருட இறுதியில் நடமாடும் சேவையை மெத்தா நிறுவத்தினர் நடாத்தினர். இதில் 22க்கு மேற்பட்டோர் சிகிச்சை அளிக்கப்பட்டு செயற்கை உறுப்புக்கள், பொருத்துவதற்காக அளவுகள் எடுக்கப்பட்டன. மேலும் 53 நபர்களுக்கு பொய்க்கால்கள், பொய்க்கைகள், போலியோ காலனிகள், சார்பு உறுப்புக்கள், நடமாடும் கருவிகள், நடமாடும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. உறுப்புக்களைப், பொருத்திய பலர் தன்னம்பிக்கையுடன் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதற்காக மீன்பிடி தொழில், விவசாயத் தொழில், கால்நடை வளர்ப்பு, வாகனம் ஓட்டுதல்;, சைக்கிள் வியாபாரம், தச்சுவேலை, மேசன்வேலை, கூலிவேலை போன்ற வேலைகளிலும், பாடசாலையில் கல்வி கற்று, அரசாங்கக் கடமையிலும் ஈடுபட்டுள்ளனர். இவை ஏனைய ஊனமுற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமென மெத்தா நிறுவன தொடர்பு அதிகாரி திரு.சின்கிளேயர் பீற்றர் கூறினார். மேலும் தைமாத நடமாடும் சேவை துணுக்காய், மாங்குளம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும், மன்னார் வைத்தியசாலையின் அதன் சேவை 2ம் வாட்டிற்கு அருகில் நாளாந்தம் நடைபெற்று வருவதாகவும் எமது தொலைபேசி இலக்கம் – 023-3230-473 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். தகவல்: திரு.சின்கிளேயர் பீற்றர் மெத்தா தொடர்பு அதிகாரி மன்னார் வைத்தியசாலை மன்னார் 21-12-2012

Mr.Peter Sinclair, Liaison Officer
Meththa Foundation of Artificial limbs & Appliance Division
Mannar General Hospital , Mannar.