நகர சபை மற்றும் Diaspora –Lanka பங்காளித்துவம்

நகர சபை மற்றும் Diaspora –Lanka பங்காளித்துவம் தொடர்பான அறிக்கை – 26ஃ11ஃ2012

மன்னார் நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், Diaspora –Lanka   நமக்கு உதவுவதற்கு முன்வந்தது. நகர சபையின் அபிவிருத்திக்காக தமது நிபுணத்துவம் மற்றும் நிதியின் ஊடாக Diaspora –Lanka பங்களித்து வருகின்றது.

இந்த குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆச்சரியகரமான முன்னேற்றத்திற்காக, பொது மக்களின் சார்பில் நாம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Diaspora –Lanka வின் பணிப்பாளர் திரு. ஜெரமி லியனகே மற்றும் அதன் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களுக்கும், பின்வரும் செயற்பாடுகளுக்காக எமது நன்றி மற்றும் பொது மக்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

1.    நான்கு தொகுதி கிராமக் கூட்டங்களில் பள்ளிமுனை, பனங்கட்டிக்கொட்டு கிழக்கு, பெட்டா, சின்னக்கடை மற்றும் உப்புக்குளம் பகுதிகளில் பொது மக்களின் கருத்துக்களை பெறுவதற்கு ஆய்வின் ஊடாக 500 மக்களை அடைந்து மன்னாரின் மறுமலர்ச்சி 2022 நிகழ்ச்சித் திட்டத்தை நகர சபை ஆரம்பிப்பதற்கு உதவியமைக்காக, மற்றும் 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நகர மண்டபத்தில் இறுதி பொது மக்கள் விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தியமைக்காக.

2.    அடுத்த பத்து வருடங்களில் மன்னாரின் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட பொது மக்கள் கருத்து குறித்த சிறந்த அறிக்கை ஒன்றை தயாரித்தமைக்காக. கொழும்பில் உள்ள அமைச்சுக்கள் மற்றும் ருனுயு மற்றும் NPPனு போன்ற அரசாங்க நிறுவனங்கள், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், மலேசியா மற்றும் கனடா போன்ற வெளி நாடுகளினால் இந்த அறிக்கை பார்வையிடப்பட்டுள்ளது.

3.    3.    ACLG, UDA  மற்றும் NPPD தலைவர்களுடன் நகர சபை பேரம் பேசுவதற்கு மற்றும் ஒழுங்கு முறை அதிகாரங்கள் தொடர்பில் நகர சபைக்கு பயிற்சி வழங்கல் மற்றும் மன்னார் நகரத்திற்கான கருத்துத் திட்டத்தை ருனுயு சமர்ப்பிப்பதற்கு போன்ற தொடர்ச்சியான விஜயங்களை தூண்டுவதற்கு உதவியமைக்காக. ருனுயுஇன் நகரத் திட்டம் மற்றும் செயற்றிட்டங்களுக்கு பின்னூட்டம் வழங்குவதற்கு கழிவு நீர் வடிகால் திட்டம், எதிர்கால அபிவிருத்தி, போக்குவத்து, மண்டலமாக்கல் மற்றும் காணிப் பயன்பாடு போன்றன தொடர்பில் மன்னார் மக்கள் மற்றும் தொழில் நுட்ப அதிகாரிகளுக்கு ஐந்து செயலமர்வுகளை ஒழுங்கு செய்வதற்கு உதவியமைக்காகவும்.

4.    அடுத்த பத்து வருடங்களின் மன்னாரின் அபிவிருத்திக்கான செயற்றிட்டங்களை எவ்வாறு திட்டமிடுவது என்பது தொடர்பில் மன்னாரின் மறுமலர்ச்சி 2022இன் 8 துணை குழுக்களுக்கு செயலமர்வுகளை நடத்துவதற்கு கொழும்பிலிருந்து உலக வங்கி ஆலோசகரை வரவழைத்தமைக்காக. பெறுபேறுகள்சார் முகாமைத்துவ செயலமர்வுகளின் விளைவாக, நன்கொடையாளர் மன்று என்பது திட்டமிடப்பட்டு, வேறு சில செயற்றிட்டங்களுக்கு வெளி நிதியுதவிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

5.    UDA மற்றும் NPPD ஊழியர்களின் தொடர்ச்சியான பயிற்சியின் பின்னர் மன்னாரின் நகரத் திட்டத்திற்கு விளக்கமான நிலப் பயன்பாட்டு ஆய்வினை முன்னெடுப்பதற்கு மன்னாரில் தகுதி வாய்ந்த 16 இளைஞர்களை ஆட்சேர்ப்பதற்கு நகர சபைக்கு உதவியமைக்காக.

6.    500 வீதி நாய்களுக்கு உயிரகற்றல் செய்வதற்கு, மன்னாரிற்கு விஜயம் செய்வதற்கு வுயுPயுஇனை ஒழுங்கு செய்தமைக்காக.

7.    மன்னார் இளைஞர்களை ஆட்சேர்த்து ஆய்வினை முன்னெடுத்து நகர சபை எல்லைக்குள் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையை கண்டறிவதற்கு நகர சபைக்கு உதவியமைக்காக. 375 வீதி கழுதைகள் கண்டறியப்பட்டுள்ளன. விலங்கு ஆர்வலர்களின் சர்வதேச குழு தற்போது மன்னார் கழுதைகள் தொடர்பில் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளதுடன், இந்த மாதத்தில் இந்தியாவிலிருந்து கழுதைகள் சரணாலய நிபுணர்கள் மூவர் ஆரம்ப மதிப்பீட்டினை செய்வதற்கும், கழுதைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களை அறிந்து கொள்வதற்கும் விஜயம் செய்திருந்தனர். கழுதைகளின் புனர்வாழ்வு குறித்ததாக பொது மக்களின் எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் அவர்கள் வழிகோலியுள்ளனர்.

8.    அமைச்சர். Rishard Badudeen  , கொழும்பு ருனுயு பணிப்பாளர், அபிவிருத்தி திட்டமிடல், கொழும்பு NPPD பணிப்பாளர் நாயகம், வட மாகாண பிராந்திய பணிப்பாளர், எமது நகர சபை தலைவர், செயலாளர், உபதலைவர் மற்றும் வுயு, மன்னார் நகர சபை, ஆகியோருக்கு இடையில் மற்றும் புதிய நகரத் திட்டம் செயற்படுத்தல் திட்டம் தொடர்பில் நேரிடையான உரையாடலுக்கு வசதியளித்தமைக்காக. மன்னார் நகர சபையின் அபிவிருத்தி தொடர்பான சிறந்த புரிந்துணர்வுக்கு இந்த உரையாடல் வழி வகுத்தது. இந்த முன்னெடுப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அனைவரும் இணங்கியுள்ளனர்.

9.    நகர்ப்புற நகரத் திட்டமிடல், வர்த்தக அபிவிருத்தி, சுற்றுச் சூழல், சூழல் சார் சுற்றுலா, கல்வி, சமுதாயங்களின் தேர்ச்சி, மகளிர் அபிவிருத்தி மற்றும் நிதியுதவி தேவையாகவுள்ள சமுதாய

நிகழ்ச்சிகள் போன்ற எட்டு துணை குழுக்களின் செயற்றிட்ட பிரேரணைகளை முன்வைக்கும் முகமாக டிசம்பர் மாதத்தில் நன்கொடையாளர் மன்றினை ஒழுங்கு செய்வதற்கு ஆரம்பித்தமைக்காக.
10. மன்னார் அபிவிருத்திக்கு தேவையான பரிந்து பேசல் மற்றும் ஆதரவு தேடலை வசதியளிப்பதற்கான சர்வதேச நாடுகள் மற்றும் தொடர்புகளுடன் சிறந்த வலையமைப்புக்களை கொண்டுள்ளமைக்காகவும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.