மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம்

மன்னார் நகர சபை மன்னாரில் கடந்த 200 வருடங்களாக வாழ்ந்து வரும் சுமார் 500 ற்கு மேற்பட்ட கழுதைகளை, அதன் உச்ச பயனை பெறுமுகமாக ஆலோசனைகளை கடந்த 5 மாதங்களாக நாடாத்தி வந்தது. இதன் பயனாக “அவுஸ்திரேலியா டயஸ்போரா லங்கா” வின் உதவி கோரப்பட்டபோது அவர்கள் பல வெளிநாட்டு மிருக வளர்ப்பு சங்கங்களுடனும, ; கால்நடை பாதுகாப்பு வைத்தியர்களுடனும் கலந்துரையாடியதின் பேரில் அனாதரவான மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம் ஏற்பட்டுள்ளது.
இதன் முன்னோடியாக கார்த்திகை 07, 08, 09ம் திகதிகளில் இந்தியாவிலிருந்து மூன்று ஆலேசகர்கள் மன்னாரிற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இக்குழுவின் தலைவராக இந்தியா புதுடில்லியைச் சேர்ந்த திரு. வினோத் கருணா அவர்களும், செல்வி இராம் பர்வின் சமூக சேவையாளரும், கல்வி தொடர்பதிகாரியும், சென்னையைச் சோர்ந்த வைத்திய கலாநிதி ரமேஸ் அவர்களும், இத்துடன் அவுஸ்திரேலியா டயஸ்போரா லங்காவின் தலைவர் திரு. ஜெரமி லியனகே அவர்களும், சமூகமளித்திருந்தனர்.

இவர்கள் கடந்த 3 தினங்களில் மன்னார் அரச அதிபர், மன்னார் நகர சபை தலைவர், செயலாளர், நகர வபை ஊழியர்கள், மன்னார் கால்நடை வைத்தியர், பொதுசுகாதார பரிசோதகர்கள், கழுதை வளர்ப்பு இளைஞர் குழுத் தலைவர் திரு. மயூரன், திரு. சயந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி போன்றவர்களை சந்தித்ததுடன் கிராமிய மட்ட அமைப்புக்களான சாந்திபுரம் மாதர் சங்கம், எழுத்தூர் சலவைத் தொழிலாளர் சங்கம், மன்னார் பழைய புகையிரத நிலையபொதுமக்கள், மன்னார் மாற்றாற்றல் புனர்வாழ்வு அமைப்பு (ஆயுசுனுயுP) உத்தியோகத்தர்கள், மன்னார் வர்த்தகர்கள், நகரில் உள்ள பிரயாணிகள், ஏனைய பொதுமக்கள் போன்றவர்களிடம் கேள்வி கொத்து மூலமாகவும், கழுதைகளின் பிரயோசனங்கள் பற்றி பயிற்சியளித்ததன் மூலமும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ் ஆய்வின் மூலம் மன்னார் மக்களில் ஒரு சிலர் கழுதைகளின் பிரயோசனத்தை அறிந்து கொண்டதுடன் இவற்றை பராமரிப்பதன் மூலம் கழுதைகளின் உச்ச பயனை பெறமுடியுமென நம்பிக்கை தெரிவித்தனர்.
கழுதையின் பால் அதிக புரதம் கொண்டதாகவும் நலிவுற்ற குழந்தைகளுக்கு ஒரு சத்துள்ள உணவாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதே~;, ஈரான், ஆபிரிக்கா, ஜக்கிய ராட்சியம் போன்ற நாடுகளில் உபயோகிப்பதாகாவும். கழுதைகள் பராமரிப்பு சங்கம் இந்தியாவில் 1998 ழும், எகிப்து, எத்தியோப்பியா, மெக்சிக்கோ, தண்சானியா, தென்னாபிரிக்கா, உகண்டா, சிம்பாவே, யமேக்கா, பேரு, சீனா போன்ற இடங்களில் 2000ம் ஆண்டுகளில் கழுதை பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும். இதுவரை 4000 ற்கும் மேற்பட்ட கழுதைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணியுள்ளாதாகவும்,

கழதைகளுக்கான பராமரிப்பு இல்லங்கள் உலகில 1973ல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பன்னிரெண்டாயிரத்திற்கும் (12, 000) மேற்பட்ட கழுதைள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும். ஜக்கிய இராட்சியம் உலகின் 8 வது கழுதை பராமரிப்பு நாடாக திகழ்வாதாகவும், அகில உலகல 342 ஊழியர்கள் தொழில்நுட்பம், வைத்தியம், ஆலோசனை. பயிற்சி போன்றவற்றை நடாத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

இறுதியில் சாந்திபுரம் மாதர் சங்க உறுப்பினர்கள், மன்னார், எழுத்தூர் சலவைத் தொழிலாளர் சங்க ஊழியர்களும், மன்னார் பழைய புகையிரத நிலைய பொதுமக்களும், மன்னார் நகர சபை உறுப்பினர் ஒர்சிலரும், விN~ட தேவைகளுக்குட்பட்டோர் புனர்வாழ்வு (ஆயுசுனுயுP) உறுப்பினர்களும், மன்னாரில் உள்ள ஒரு சில கழுதைகளுக்கு குடி நீர் வழங்கியும், உணவு வழங்கியும், அதை ஓர் வளர்ப்பு பிராணியாக ஒரு சில மாதங்களில் மாற்ற முடியும் எனவும் பின்பு அதன் பின்னங்கால்களை பிணைத்து விடுவதன் மூலம் அவற்றின் ஓட்டத்தை குறைத்து விட முடியும் எனவும் பின்பு அதனை தடவி கொடுத்து அதற்கு ஒர் பெயர் வைத்து 4 – 6 மாதங்களில் அதை ஒர் செல்ல பிராணியாக மாற்றமுடியுமென கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு இந்தியா ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதன் பின் அதன் வாய்க்கு கடிவாளம் இட்டு ஆடு, மாடு, குதிரைகள் போன்று பல வேலைகளுக்கு அதை உபயோகிக்க முடியும். சாரசரி ஓர் கழுதை 80 – 120 கிலோ கிராம் நிறையுடையதாகவும் 30 – 50 கிலோ கிராம் பொதி சுமக்க கூடியதாக உடலமைப்பு கொண்டுள்ளதாகவும். அதன் கால்கள் கற்பாறைகளிலும், உயரமான மேட்டிலும், உயர்ந்த கட்டிட படிகளில் ஏறக்கூடியவாறும் நன்கு பலம் உள்ளதாக அமைந்துள்ளது.

படைப்புக்களில் ஒரேயொரு இம்மிருகம் தனது தலையில் இருந்து முதுகு வரையும், வலது காலில் இருந்து இடது கால் வரையும் குருசு போன்ற வெள்ளை அல்லது கறுப்பு அடயாளங்களை கொண்டுள்ளது.

இதன் சாணம் நுளம்புஇ கொசுக்கள்இ ஈக்கள் போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்;தி உள்ளது இவற்றை புகைய10ட்டுவதன் மூலம் பாதுகாப்பளிக்க முடியும். ஆபிரிக்க நாடுகளில் இவற்றின் இறைச்சியை உண்ணுகின்றனர்.

மன்னாரில் 50 வருடங்களுக்கு முன்பு சலவைத் தொழிலாளர்கள் தமது பொதிகளை கழுதையில் ஏற்றியுள்ளதாகவும், மீனவர்கள் வீட்டில்லிருந்து கடலுக்கு வலைகளையும. பிடிக்கப்பட்ட மீன்களையும, சந்தைக்கு கொண்டு வரவும், விறகு வெட்டி பிழைக்கும் மக்கள் காடுகளில் விறகு வெட்டி சுமந்து கெண்டு வந்ததாகவும், மன்னார் கோட்டையை கட்டவதற்கு திருக்கேதீஸ்வரத்தில் இருந்து முருகைக் கற்கள் கழுதையில் கொண்டு வந்ததாகவும் சான்றுகள் பகர்கின்றன.

மேலும் ஜக்கிய ராட்சியத்தில் இருந்து கழுதைகள் புனர்வாழ்வு நிபுணர்கள் ஜந்து பேர் அடுத்த மாதம் மன்னாரிற்கு வருகை தரவுள்ளனர்.

இதனால் வேண்டப்படாத மிருகமாக ஒதுக்கி விடப்பட்ட மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம் பிறக்குனெ மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.