Category Archives: Publications

468 ஆண்டுகள் பழமையான குருசுக்கோயில்

புனித பிரான்சிஸ்கு சவேரியார் சீடரின் மன்னார் வருகை நினைவு கூறப்பட்டது 30.11.2012; அன்று ஆகும். இற்றைக்கு 468 வருடங்களுக்கு முன் மன்னார் வாசிகளின் வேண்டுகோளிற்கிணங்க மன்னாருக்கு; தோணி முலம் வருகை தந்த புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் நம்பிக்கைக்குரிய சீடரான ‘சவேரியார் குரு’ மன்னாருக்கு வருகை தந்தார்.
பட்டிம் கிராமத்திற்கு செல்வதற்காக வடதிசையில் இ தற்போது அவரின் பெயரை கொண்டு இயங்கும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள கடல் ஏரியைக் கடப்பதற்கு முனைந்த போது அவரின் கழுத்திலிருந்த குருசு கடலில் விழுந்தது. அவர் பல முயற்சிகள் எடுத்தும் அச்சிலுவையை கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்களின் பின் கடல் நண்டுகளின் கால்களில் சிக்கிய நிலையில் அச்சிலுவை கடல் ஓரத்தில் இருக்கக்கண்டு அதை மீண்டும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி கழுத்தில் அணிந்து கொண்டார்.
அதன் நினைவாக அக்காலத்து வேத சாட்சிகளான மன்னார் கிறிஸ்தவர்களால் அவ்விடத்தில் காட்டு மரங்களினால் அமைக்கப்பட்ட குருசு ஒன்று நடப்பட்டது. அவ்விடத்தை கிறிஸ்தவர்கள் “மன்னார் குருசுக் கோயில் என்று அழைத்தனர்.

பனைதென்னை மரங்களினால் கட்டப்பட்ட சிறிய கோயிலில் மக்கள் குறிப்பாககுருசு நட்ட இடத்தில் பிராத்தனை செய்து தமது வலைகளை வீசிய போது இறால்நண்டுதிருக்கைபாலை உட்பட மீன்பாடு அதிகம் நடந்ததாக நம் முன்னோர்கள் மூலம் அறிய முடிகிறது.

1980-1998 களில் இலங்கையில் கலவரம் ஆரம்பித்து 70மூ மக்கள் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சென்ற போது இச் சிறிய கோயில் கைவிடப்பட்டது. பின்னர் 2011களில் பள்ளிமுனைமன்னார் மற்றும் சுற்றியுள்ள அயல் கிராமங்களில் உள்ள மக்கள் தனிமையில் ஒன்றுகூடி வழிபாடுகளை செய்தனர். இக்கோயிலை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப வேலைகள் 1.1.2011ம் திகதி  பங்குத்தந்தை       அருட் திரு. யேசுராஜா அடிகளாரால்  தொடக்கப்பட்டு30.11.2012ம் திகதி முடிவுக்கு வந்தது. இவ் ஆலயமானது சம்பிரதாய ப10ர்வமாக ஆசீர் வதிக்கப்பட்டு அதிமேதகு வண. இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டதுடன்  திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

இதில் வேத சாட்சியின் மைந்தர்களான மன்னார்தோட்டவெளிபள்ளிமுனை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்றுப்பழமை வாய்ந்த இக்கோயிலில்  6’ உயரமான கர்த்தர் சிலை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிறுவப்பட்டுள்ளது.. இது பரப்புக்கடந்தான் கத்தர் திருச்சுருவத்தை எமக்கு நினைவ10ட்டுவதாக  உள்ளது.அமைதியான இடத்தில்கடல் ஏரி சூழ்ந்துள்ள இக் கோயில் பக்கர்களுக்கு ஓரு தியான மண்டபம் போல விளங்குகிறது.    “ சுமை  சுமந்திருப்போரே எல்லோரும்  என்னிடம் வாருங்கள்”; என்பது போல மனஅமைதி  கிடைக்கப்பெறும் ஒரு தலமாக இது காணப்படுகின்றது.
இவ்வாலயத்தின் கட்டிட புனர் நிர்மாண வேலைகளுக்கு உதவி புரிய விரும்பும் மக்கள்மன்னார் செபஸ்ரியார் பேராலய பங்குத்தந்தையை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

மன்னார் பேராலய பங்குத்தந்தையர்களும்
குருசுக்கோவில் ஆர்வலர்களும்
30.11.2012

 

Mr.Peter Sinclair,

Freelance Project Consultant & Trainer,

26, Hospital Rd, Mannar. Srilanka.

M.No   +094 – (0) 77-2131-652

T.No    +094 – (0)23-222-2310

E-Mail ;   petsinclair@gmail.com

மன்னார் செபமாலை கன்னியர் சபை

உலக மக்களின் ஈடேற்றத்திற்காக மறைந்து
மௌனத்தில் செபிக்கும் மன்னார் செபமாலை கன்னியர் சபை

இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஓர் ஆன்மீகக்குரு வண. பிதா தோமஸ் குருவானவர் அக்காலத்திலிருந்த யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு. கைமர் ஆண்டகையின் அனுமதியுடனும்ஆசியுடனும் மாதாவின் மந்திர மாலையை அனுதினமும் இரவும் பகலுமாக தொடர்ந்து செபித்துவந்தார். இவர் உலக மக்களின் நல் வாழ்வுக்காகவும்ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும்பாவமன்னிப்புக்காகவும் செபிக்க ஆண்களுக்கென ஒரு செபமாலைதாசர் மௌன சபையைத் தொடக்கினார்.
இப்பெயரைக் கொண்டு உலகெங்கும்குறிப்பாக  இலங்கை இந்தியா போன்ற நாடுகளில். செபமாலை தாசர் மௌன சபை. செபமாலை கன்னியர் மௌன சபை என கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றது.

தமது ஆசாபாசங்களை அடக்கி செபம்தபம்ஒறுத்தல்மௌனம் போன்ற நற்காரியங்களை இச்சபை அங்கத்தவர்கள் செய்து வருகின்றனர். நான் பாடசாலைச் சிறுவனாக இருந்தபோதுயாழ்ப்பாணம்அச்சுவேலி தோலகட்டியில் இயங்கி வந்த செபமாலை தாசர் சபைக்கு சென்று மறைந்த வண பிதா தோமஸ் குருவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். மெலிந்த உடலும்தளராத நடையும்கூர்மையான பார்வையும்மெல்லிய தாடியும் கொண்டு காலையில் தோட்டத்தில் நடந்து கொண்டே மௌனமாக செபமாலை சொல்லித்திரியும் ஓர் உத்தம ஆன்மாவைக் கண்டேன்.

யாழ் தோழகட்டியில் ஆவர் ஆச்சிரமத்தில் நிறைந்து காணப்படும் முந்திரிகைநெல்லிமாதுளை முதலியவற்றைக் கொண்டு சுவையும்உயர்ந்த தரமும் வாய்ந்த மென்பானங்களை தயாரித்து உலக நாடுகளில் பிரபல்யம் பெற்று வருகின்றனர். “ தோலகட்டி நெல்லி ரசம்” கனடாஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிரசித்தி பெற்றதாக காணப்படுகின்றது.
தோமஸ் குருவானவரின் இறுதிநாட்கள் நெருங்கிய நிலையில்இறந்த அவரது புனித உடல் தோழகட்டி ஆச்சிரமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலாலிஅச்சுவேலிஒட்டகப்புலம் போன்ற பகுதிகள் 1990 ம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த போதுமக்கள் நடமாட்டத்திற்கப்பாற்பட்ட  சூனிய பிரதேசமாக மாறியமையாலும்உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டமையாலும்அமரர் வண. பிதா தோமஸ் அடிகளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுயாழ் ஆலய வீதியில் அமைந்துள்ள புதிய செபமாலை தாசர் சபை வளாகத்தில் இரண்டாம் முறை அடக்கம் செய்யப்பட்டது.இந்த இறை அடியாருக்கு புனிதர் பட்டம் வழங்கும் முயற்றிகளும் நடை பெற்று வருகின்றன.

அச்சுவேலியில் ஆரம்பித்த ஆண்களுக்கான செபமாலை தாசர் சபையானது இன்று துரித கதியில் வளர்ச்சியடைந்து பெண்களுக்கென ஒரு தனிச்சபை ஒன்றினையும் கொண்டுள்ளது.இன்று ஆண்கள்பெண்கள் என பலர் இச் சபையில் இணைந்து திருச்சபைக்காக ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். மறைந்த அருட் சகோதரி நசரேத் தனது சபையை 1975 களில் மன்னாரில் ஆரம்பித்து வைத்தார். மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் அருகில் இயங்கி வந்த செபமாலை கன்னியர் சபையானதுபின்னர் ஆயர் இல்லத்தின் இருப்பிடமான பட்டி தோட்டம் கிராமத்தில் பெரிதாக வியாபித்தது.அதில் 12 பேருக்கு குறையாத கன்னியர்கள் உலக மக்களின் ஈடேற்றத்திற்காக மௌனமாக பணியாற்றி வருகின்றனர்.
வெண்ணிற ஆடை அணிந்து நீல கரையுடைய பட்டி இடுப்பில் அணிந்து பெரிய சிலுவையுடன் கூடிய செபமாலை அணிந்துதலைகுனிந்து மௌனத்தில் நிலைகொண்டு இறைபணியாற்றி வருகின்றனர். அச்சுவேலியில் பெரிய கன்னியர் மடம் ஒன்றை அருட் சகோதரி திரேசா கட்டி முடித்துள்ளார். அதில் பல இளம்பெண்கள் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.இது போன்ற பெரிய மடம் நீர் கொழும்பிலும் உண்டு. தற்போது  இச் சபையின் ஆசிய தலைவராக வண. பிதா ளுவநிhநn விளங்குகின்றார். இன்று இறையாசீர் நிறையப் பெற்று செபமாலை தாசர் குருக்கள் மற்றும் துறவிகள் சபையானது வருடத்தின் 365 நாட்களும்ஒருநாளில் 24 மணித்தியாலமும் தேவ நற்கருணை; முன்னிலையில் தொடர் செபமாலை செய்து வருகின்றனர். இவை உலக மக்களின் பாவங்களுக்கான பரிகாரமாகவும்மன்னிப்பிற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.

01-12-2012 மன்னார செபமாலை தாசர் கன்னியர் சபை திராட்சைத் தோட்டத்தில் 3 இளம் கன்னியரää; மேதகு ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்படடுள்ளனர். அருட் சகோதரி மேரி கீதாஅருட்சகோதரி மேரி கில்டாஅருட்சகோதரி ஐடா ஆகியோர்  இச்சபையின் புதிய ப10க்களாவர். இவர்களை மனதார வாழ்த்தி இறையாசீருக்காய் செபிக்கிறேன்.தற்போது மன்னார் செபமாலை தாசர் கன்னியர் சபைத் தலைவி அருட்சகோதரி எலிசபேத் அவர்களையும் இறைபணிக்காவும்தொடர்ச்சியான மனிதாபிமான பணிக்காகவும் வாழ்த்திநிற்கின்றேன்.

தொகுப்பு:  திரு. சின்கிலேயர் பீற்றர்.

Mr. Sinclair Peter,
Freelance Project Consultant & Trainer,
26, Hospital Rd,
Mannar. Srilanka.
.

vankalai-schools-5

வங்காலைப் பாடசாலைகள்

மன்னார் மாவட்டத்தின் ஒரு பாலைவனச் சோலையாக, மாதோட்டத்தின் கலங்கரை விளக்காக, கல்வியில் சிறப்பிடமாக, விசுவாசத்தின் விளைநிலமாக, கலைகளின் வடிவமாக பரிணமித்து நிற்கும் வங்காலைக் கிராமத்தின் கல்வியும் கலைகளும் எமது விசுவாசத்திற்கு வித்திட்ட வரலாற்றை நாம் நோக்குவோம்.

“கல்வியிணுங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை” என்ற ஆன்றோரின் முது மொழிக்கொப்ப கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த எமது கிராம மக்கள் கல்வி வளர்ச்சிப் பணியில் காட்டி வந்திருக்கும் அக்கறை பெரும் வியப்புக்குரியதே.

ஆரம்ப காலங்களில் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்ட நாடாக காணப்பட்ட காலங்களில் அவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காக கரையோரங்களைக் கைப்பற்றி வந்தனர். பின்னர் சுதேசிகளிடம் தங்களது சமயத்தை பரப்புவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர்கள் சமயத்துடன் கல்வியிலும் ஆர்வம் காட்டினர். இதனால் ஆரம்ப காலங்களில் பள்ளிக்கூடங்கள் எல்லாம் சமயதலைவர்களிடம் காணப்பட்டது. நிர்வாகம், பாடம் எல்லாம் இவர்களது தீர்மானப்படி இடம் பெற்றது.

பாடசாலைகள் கோவில் பற்று பாடசாலைகளாக, கோவிலை அண்டி காணப்பட்டது.இதிலிருந்து பாடசாலைகளின் வளர்ச்சி ஆரம்பிக்கபட்டது. இவ்வாறான நடவடிக்கையே வங்கம் தங்கும் சாலையாக காணப்பட்ட வங்காலை எம் பதியில் கல்விக்கு வித்திட்டது எனலாம்.இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்னரே எமது கிராமத்தில் பாடசாலைகள் நடாத்தப்பட்டுள்ளமையும் அது கத்தோலிக்க கோவிலைஅண்டியதாக காணப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன.

ஆரம்ப காலங்களில் குச்சிவீடும் குடிசையும் தான் வங்காலைப் பாடசாலை. 1900 இற்கு முற்பட்ட காலத்தில் கத்தோலிக்கக் கலவன் என்ற பெயரில் மிகச்சொற்ப மாணவர்களைக் கொண்டதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

ஏடும் எழுத்தாணியும் இவர்கள் கல்வி கற்கும் கருவிகளாகும். ஓலைச்சுவடி கொண்டு கற்றாலும் இவர்களது கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படவில்லை. திண்ணைப் பாடசாலைகளில் கல்வி வளர்த்த தலைமை ஆசிரியர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு சூசைப்பிள்ளை அவர்களும் அதனைத் தொடர்ந்து பண்டிதர் கபிரியேற்பிள்ளை வாத்தியாரும் மிகச் சிறப்பாக கல்விக்கு வித்திட்டுள்ளனர்.என்பது இன்றும் பலராலும் கூறப்படும் விடயமாகும். பண்டிதர் கபிரியேற்பிள்ளையோடு சேர்ந்து வந்காலையின் முதல் ஆசிரியப் பெண்மணியான சலோமையா.லீனா அவர்களும் நீண்ட காலமாக நற்சேவையாற்றி வந்துள்ளனர்.

1931 ஆண்டில் திரு.எஸ்.பர்ணபாஸ் குலாஸ் அவர்கள் 226 மாணவர்களையும் நான்கு ஆசிரியர்களையும் அரைப்பகுதி கற்சுவரால் ஆன கட்டிடத்தில் இப்பாடசாலையை இயக்கி வந்துள்ளார்.

இவர் 1963 ம் ஆண்டு வரையான கூடிய காத்திற்கு வங்காலைக் கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார்.இவரது காலப்பகுதியில் அதாவது 1935.05.01 வரை வங்காலை கத்தோலிக்க பாடசாலையானது வங்காலை ஆண்கள் பாடசாலை, வங்காலை கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலை எனப் பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. அருட்தந்தை சூசைதாசன் நல்லையா அடிகளாரின் வேண்டுகோளின் படி 1935ல் திருக்குடும்ப கன்னியர்கள் எமது பங்கிற்கு வந்து கல்விப்பணியில் ஈடுபட்டனர்.இதன் பின்பு கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலையை இவர்கள் பொறுப்பேற்று நடாத்தினார்கள்.

ஆண்கள் பாடசாலையானது புனித ஆனாள் பாடசாலையாக மாற்றப்பட்டது. 1944ல் நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆண் பெண் இருபாலரிலும் இருந்து ஆறு மாணவர்கள் திறமை சித்தி பெற்று எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு அரச செலவில் கல்வி கற்க தெரிவாகினர். ஆயினும் அப்போதிருந்த மதத் தடை காரணமாக அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை.பின்னர் இத் தடை நீக்கப்பட்டதால் தொடர்ந்து பல ஆண்டுகள் இப் புலமைப் பரிசில் பெறும் மாணவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினை எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்திலும், புனித சவேரியார் கல்லூரியிலும் பெற்றனர். ஏனெனில் 1960ம் ஆண்டு வரை எமது பாடசாலை ஓர் உதவி நன்கொடை பெறும் ஆரம்ப பாடசாலையாகவே ஆங்கில பாதிரியாராலும் யாழ் மேற்றிராசனத்தாலும் வளர்த்து வரப்பட்டது.

பின்னர் 1960ல் இலங்கை அரசினால் இவ்வகைப் பாடசாலைகளை அரசுடமையாக்கி முகாமையை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு பூராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில் எமது வங்காலைப் பாடசாலையும் அரசுடமையாக்க எடுத்த முயற்சிக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புக் காட்டப்பட்டது. இதற்கான நியாயங்களும் எடுத்து முன்வைக்கப்பட்டது. ஆயினும் அரசு தனது நிலையில் இருந்து சற்றும் தளராது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி சில உறுதி மொழூpகளை வழங்கியது. 1960 மார்கழி மாதத்தில் இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்ட பாடசாலையாக மாறியது.ஆயினும் பாடசாலை தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஈழத்தின் பல பாகங்களிலும் மகாவித்தியாலயங்களும் மத்திய வித்தியாலயங்களும் உருவாகி கொண்டிருந்த வேளையில் எமது பாடசாலை அதே தரத்தில் காணப்பட்டமையானது பெற்றோர் மற்றும் பெரியோர் மத்தியில் கல்வி தொடர்பான விளிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் இக் காலப் பகுதியில் கிராமசபைத்தலைவர் திரு.உ. சம்சோன்.மிராண்டா அவர்கள் தலைமையில் அதிபர் திரு.திருச்செல்வம் அவர்களின் நெறிபடுத்ததாலும் முன்னார் அதிபர்கள் தொ.மக்சிமஸ்.லெம்பேட் திரு.பி. சவிரியான் லெம்பேட், மற்றும் திரு.சீ. ஞானப்பிரகாசம். லெம்பேட், திரு. ப. அபியாஸ். சோசை திரு. செ. இம்மனுவேல்.குரூஸ் ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு.ஏ.யு.அழகக்கோன் அவர்கள் அனுசரனையுடன் அன்றைய கல்விப்பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடி எமது பாடசாலையை தரமுயர்த்த முயற்சித்தனர். இம் முயற்சி 1968.01.05 ல் வெற்றியளித்தது. 1974.07.31 வரை திரு.எஸ். அதிரியான்.மார்க் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றிருந்தார். இவரது காலத்தில் 1972.06.12.இல் கல்வியமைச்சின் மேலதிக நிரந்தர செயலாளர் உயர் திரு.மு.ர்.ஆ. சுமதிபால அவர்களால் சம்பிரதாய பூர்வமாக உயர்தர கலைப்பிரிவு புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இம் மாணவர்கள் 1975 ல் பல்கலைக்கழகம் சென்று எமது பாடசாலையின் பெயரைத் தடம் பதித்தனர். அதன் பின்னர் 1978.05.02 வரை திரு. எஸ்.சூசையப்புபீரிஸ்அவர்களும்அவர்களைதொடர்ந்துமுன்னாள்

மன்னார் கல்வி பணிப்பாளர் அமரர். எஸ். வேதநாயகம் அவர்களும் கல்விப்பணியை மேற்கொண்டு நடத்தினர். இதனை தொடர்ந்து திரு.தொ.மக்சிமஸ் அவர்கள் அதிபராக பாடசாலையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரைக் காலமும் தனித்து இயங்;கி வந்த பாடசாலைகளான புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையையும் வங்காலை கிறிஸ்து இராசா பெண்கள் பாடசாலையையும் 1981.10.01 முதல் புனித ஆனாள் மகாவித்தியாலயம் என்ற பெயரில் ஒன்றினைந்து இயங்கத் தொடங்கியது. ஆலயப்பகுதியில் காணப்பட்ட இப் பாடசாலை தற்போது காணப்படும் புதிய இடத்திற்கு மாற்றம் பெறுவதற்கான சிந்தனை துளிர்க்கத் தொடங்கியது. இதன் பயனாக திரு.தொ.மக்சிமஸ்.லெம்பேட் அவர்களின் அயராத முயற்சியால் அப்போதைய அமைச்சர் செ.இராஜதுரை அவர்களது முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பி.சூசைதாசன்.சோசை ஆகியோரின் பரிந்துரையாலும் நாம் தற்போது காணும் 100’ஒ 20’ கொண்ட முதலாவது மாடிக்கட்டிடத் தொகுதிக்கான அரச நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. இதற்கான அடிக்கல் அன்றைய வீடமைப்பு அமைச்சர் ஜனாப் எம்.எச்.முகம்மது அவர்களால் நாட்டப்பட்டது.

சதுப்பு நிலமாகக் காணப்பட்ட இப்பகுதியின் ஒரு பகுதியில் தனியார் குடிமனை காணப்பட்டமையினால் இதனை அப்புறப்படுத்தி முழுப்பரப்பையும் பாடசாலைக்கு எடுக்கும் திட்டத்தில் குடியிருப்பாளருக்கு (மாசில்லா குரூஸிற்கு) ; நஷ்ட ஈடும் வேறுக் காணியும் வழங்கப் பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது ( Marcilla croos' Home) புதிய மேல்மாடி அமைக்கும் திட்டத்திற்கான நிதி பற்றாக்குறையாக காணப்பட்டமையினால் ஆலய நிதியின் மூலம் அத்திவாரமும், ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. இவ் வேலையின் அன்றைய ஆலய சபையாரும் பங்குத்தந்தை அமரர் அருட் திரு.மேரிபஸ்ரியான் அவர்களும் முன்னின்று உழைத்தனர். அத்துடன் பங்கு இளைஞர்கள் ஊர் பெரியோர்கள் யாவரும் அயராது பாடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது பணியை தொடர்ந்து அதிபர் எப். சவிரியான்.லெம்பேட் அவர்கள் எமது பாடசாலையின் கல்விப்பணியை 1984.05.18 வரை வெற்றிகரமாக கொண்டு நடாத்தினர். இக் காலப்பகுதியில் டிலாசால் சபை அருட்சகோதரர் கிறிஸ்ரி டோரஸ் தமது கல்விப்பணியை எமது பாடசாலையில் ஆற்றி வந்தார். இவரைத் தொடர்ந்து 1985.06.01 வரையும் திரு.உவில்பிரட்.சோசை அவர்கள் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பொறுப்பேற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1987.01.25 வரை திரு.ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்கள் பாடசாலையின் கல்விப்பணியை பொறுப்பேற்று மேற்கொண்டிருந்தார். இவரது காலத்தில் பாடசாலையில் வணிகப்பிரிவும் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டு உயர்தரப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டது.

இம் மாணவர்கள் 1987 ல் முதல்தடவையாக வணிகத்துறையில் தோற்றி பல்கலைக்கழகம் சென்று வணிகத்துறையிலும் எமது பாடசாலையின் பெயரை நிலைநிறுத்தினர். அத்துடன் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு கொள்கையில் வளப்பயன்பாட்டினை உச்சமாக பயன்படுத்ததக்க வகையில் கொத்தணிப் பாடசாலை முறை ஆரம்பிக்கப்பட்டது. இக் கொத்தணிப் பாடசாலையின் மையப் பாடசாலையாக எமது பாடசாலையும் அதன் முதல் அதிபராக திரு.ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்களும் செயற்பட்டார். இவரது காலத்தில் புதிய பாடசாலைவளாகத்தில் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான 80’ஒ20’ கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பாடசாலையின் பௌதீக வளம் விரிவாக்கப்பட்டது.

1987.01.25 திரு.ஏ.ஒஸ்பிஸ் குருஸ் அவர்கள் இளைப்பாறியதைத் தொடர்ந்து பிரதி அதிபர் திரு.சி. திபூசியஸ். பீரிஸ் அவர்களால் பாடசாலை பொறுப்பேற்று நடாத்தப்பட்ட போது ,எமது மகாவித்தியாலயம் புதிய இடத்திற்கு 1987.05.07 ல் சம்பிராயபூர்வமாக மாற்றப்பட்டது. 1988.01.02 இலிருந்து புதிய அதிபராக திரு.எஸ்.செபமாலை அவர்கள் பொறுப்பேற்றதுடன் கொத்தணி அதிபராகவும் திறமையாக செயற்பட்டார். இக் காலத்தில் எமது பாடசாலை விளையாட்டு,கல்விச செயற்பாடுகளில் முன்னேற்றமடைந்து வந்தது. இவர் 1990.05.15 இல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து திரு.பி.எமில்.குலாஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டமையால் எமது கிராமத்தில் உள்ள மக்கள் இந்தியா, மடு, மன்னார்த் தீவு ஆகிய பகுதிகளில் இடம் பெயர்ந்தனர். பாடசாலையும் இங்கு இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக இப்பாடசாலை 1991.01.09 முதல் மன்.தாழ்வுபாடு றோ.க.த.க. பாடசாலையில் சிறிது காலம் இயங்கியது.

பின்னர் சனிவிலேஜ் பகுதியில் ஓலைக் கொட்டகையில் தனியாக இயங்கத் தொடங்கியது. கல்வியைக் கண்ணாகக் காத்து வந்த எம் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 1992.08.22 அன்று இரவு பாடசாலைக் கொட்டகைக்கு இனம் தெரியாத நபர்களால் தீ இட்டுக் கொழுத்தப்பட்டது. இச்செயலானது எமது கல்வியின் ஆர்வத்தை மேலும் அதிகரித்ததுடன் எமது மண்ணிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவாக 1993.01.25 ல் அதிபர் திரு.பி.எமில்.குலாஸ் அவர்களின் தலைமையில் மீளவும் கல்வி நடவடிக்கை எமது தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் உயர் தர விஞ்ஞான பிரிவும் ஆரமபி;க்கப்பட்டு உயர்தரபிரிவின் சகல துறைகளையும் கொண்ட பாடசாலையாக திகழ்ந்தது.இவரது காலத்தில் 90’ஒ 25’ கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1994.07.11 ல் இவரின் இடமாற்றத்தினை தொடர்ந்து திரு.எஸ்.சூசையப்பு லெம்பேட் அவர்கள் பாடசாலையின் அதிபராக கல்விப்பணியாற்றியிருந்தார்.இவரது காலத்தில் 1994.09.23 மன்.புனித.ஆனாள் மகாவித்தியாலயம்,மன்.புனித.ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் ஆக தரமுயர்த்தப்பட்டது.

1995.07.25 ல் இவர் இடமாற்றப்பட்டதை தொடர்ந்து 1995.08.01 ல் திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் 1995ல் உயர் தர பரீட்சைக்கு விஞ்ஞான, கணித பிரிவுகளில் தோற்றி பல்கலைக்கழக மருத்துவ துறைக்கும், பொறியியல் துறைக்கும் மாணவர்கள் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலையின் பெயரை நிலைநிறுத்தி வெற்றி; கொண்டனர். இவரது பணிக்காலத்தில் 1997.10.06ல் திருமதி.ரஜனி ஆரோக்கியநாயகம் அவர்கள் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டு சிறந்த பணிகளை ஆற்றியிருந்தார். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையும் இவர் பெறுகின்றார்.இவர் இடமாற்றம் பெற்றதும் தொடர்ந்து திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தத்திற்கு அமைய 1999.02.01 ல் எமது மத்திய மகாவித்தியாலயம் சிரேஷ்ட,கனிஷ்ட பாடசாலையாக பிரிக்கப்பட்டு ஓரே வளாகத்தில் இயங்கியது. இக்காலத்திpல் கனிஷ்ட பாடசாலை அதிபராக திரு.சூ.றெமிஜியஸ் பீரிஸ் அவர்களும் சிரேஷ்ட பாடசாலைக்கு திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர். திரு.ஆ.பங்கிராஸ் சோசை அவர்கள் சிரேஷ்ர பாடசாலையில் இருந்து 2000.06.05 ல் இளைப்பாறிய போது பிரதி அதிபராக இருந்த டிலாசால் சபை அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் அவர்கள் பாடசாலைப் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில் எமது பாடசாலையின் அதிபர் அலுவலகம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு திருத்தப்பட்டது. தொடர்ந்து திரு.எஸ்.றெமிஜியஸ் அவர்கள் சிரேஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும், திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் கனிஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் காலத்தில் 100’ஒ 20’ கொண்ட மேல்மாடித் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைய 2002.06.01ல் சிரேஷ்ட, கனிஷ்ட பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு திரு.கி.றெமிஜியஸ்.பீரிஸ் அவர்கள் அதிபராக தொடர்ந்து செயற்பட திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றார். திரு.எஸ். றெமிஜியஸ்.பிரீஸ் அவர்கள் 2002.05.19ல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து 2002.05.29 ல் இருந்து திரு.சி.திபூசியஸ்.பிரீஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார்.

பின்னர் மன்னார் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகக் கடமை புரிந்த திருமதி.எல்.மாலினி வெனிற்றன் அவர்கள் எமது பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் குடிநீர் வசதி,மலசலக்கூட தொகுதி ஆகிய பாடசாலையின் அடிப்படைத்தேவைகள் யுனிசெவ் நிறுவன உதவியுடன் ஓரளவு பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் நெக்கோட் நிறுவன உதவியுடன் நவீன நூலகத்தொகுதியும் மூன்று வகுப்பறைத் தொகுதியும் கொண்ட புதிய கட்டிடம் 2004.01.18 ல் வடக்கு கிழக்கு மாகாண நெக்கோட் நிறுவன பணிப்பாளருமாகிய எஸ்.மரியதாசன்.குரூஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 2005ல் திறந்து வைக்கப்பட்டது.1998,1999 ம் ஆண்டு உயர்தர மாணவர்களால் சேகர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு முன்புற நுழைவாயில் வளையி அமைக்கப்பட்டு 2004.01.18 ல் திறந்து வைக்கப்பட்டது.சம காலங்களில் மன்னார் மாவட்டம் மன்னார்,மடு என்ற இருகல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டு மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளராக திரு.எம்.ஆபேல். றெவ்வல் அவர்களும்,மடு வலயக்கல்விப் பணிப்பாளராக திரு.ஏ.திபூசியஸ்.குரூஸ் அவர்களும் கடமையாற்றினர். அவர்கள் இருவரும் எமது கிராமத்தைப் பிறப்பிடமாக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் கல்வி வரலாறு பல நூற்றாண்டிற்கும் மேற்பட்டதாகும். இக் காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர்களும்,பிற இடத்து ஆசிரியர்களும் எமது கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கல்வித் தூண்களாக நின்று தமது அளப்பரிய அர்ப்பண சேவையை எமக்கு அளித்துள்ளார்கள். குறிப்பாக திருக்குடும்ப கன்னியர் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகளான மொனிக்கா, யான்மேரி, இமல்டா, கொன்ஸ்சப்ரா பசில், வலன்ரைன், கொன்சன்ரைன், சென்போல், அன்று அனற், கில்டாகாட், எவரஸ்டா, பிபியானா, அவர்களையும் எமது கல்வி சமூகம் நினைவு கூறுகின்றது. ஆயினும் எல்லோரது சேவையினையும் இக் கட்டுரையில் விபரிக்க முடியாதுள்ளது. இவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லையாயினும் அனைவரையும் எம் சமூகம் இன்று பெயர் சொல்லி நன்றியுடன் நினைவு கூறுகின்றது.

இக்காலத்தில் பல அரச உயர் அதிகாரிகள்,கல்வி உயர்அதிகாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், தொழில் நிர்வாகமானிகள், சட்டவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகர்கள்,சமயத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், சமூக அலுவலர்கள், என பலரை உருவாக்கிய தனது கம்பீரமான தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. எமது பாடசாலைக்கு பல சோதனைகள் ஏற்பட்டாலும் கல்வியிலும் கலைகலாச்சாரத்திலும், விளையாட்டிலும் பல தேசிய சாதனைகளை நிலைநாட்டி தனது பெயரை மங்காது காத்து வருகின்றது,தொடர்ந்து இதன் கல்விப்பணி எங்கும் பரவிட ஆனாள் அன்னை அருள் பாலித்திட வேண்டுமென்று இறைஞ்சுகிறோம்.

[மூலம்:-புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலய சம்பவத் திரட்டு புத்தகம். தொகுத்து எழுதியவர்: ஒஸ்பிஸ் யூட் ஆனந்தம் குரூஸ் . ஆசிரியர்  ]

[Source: http://ta.wikipedia.org] கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியவில் பதிவு செய்தவர் பிரான்சிஸ்  டாபறேறா

மன்/பத்திமா மத்திய மகா வித்தியாலயம். பேசாலை

சீ.எம்.சேவியர் பெர்னாண்டோமன்/பத்திமா மத்திய மகா வித்தியாலயம். பேசாலை. மன்னார் வலயத்தின் 08 1யுடீ பாடசாலைகளுள் ஒன்று. சுமார் 1000 மாணவர்கள், ஆசிரிய ஆளணியின்படி 43 ஆசிரியர்கள் 03 கல்விசாரா ஊழியர்கள் என்போர் இதன் நேரடி

அங்கத்தவர்களாவர். பேசாலை; புனித வெற்றிநாயகி கத்தோலிக்கத் தேவாலயத்தின் மேற்கே சுமார் 06.5 ஏக்கர் பரப்பளவான காணியில் அமைந்துள்ள இப்பாடசாலையில் வகுப்புகள் தரம் 1 தொடக்கம் 13 வரை உள்ளன. தரம் 01 தொடக்கம் 09 வரை ஆண்கள் மட்டுமாகவும், தரம் 10 தொடக்கம் 13 வரை ஆண் பெண் கலவனாகவும் உள்ளது.. தற்பொழுது நாட்டின் 104 இசுறு பாடசாலைகளில் ஒன்றாகவும், “இடைநிலைப் பாடசாலைகளை மேம்படுத்தல்”; எனும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழான விசேட திட்டத்தின் கீழ்த் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளில் ஒன்றாகவும் உள்ளது. இலங்iயின் வடமேற்கிலுள்ள மன்னார்த் தீவின் மத்தியில் வடகடற்கரையோரத்தில் அமைந்துள்ள பேசாலைக் கிராமத்திலுள்ள இரு பாடசாலைகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்பாடசாலைக்குரிய ஊட்டற் பாடசாலைகளாக மன்ஃசென்.மேரிஸ் பெண்கள் வித்தியாலயம், மன்ஃசிறுத்தோப்பு றோ.க.த.க.பாடசாலை, மன்ஃகரிசல் றோ.க.த.க.பாடசாலை, மன்ஃபுதுக்குடியிருப்பு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்பனவும், மேற்கே மன்ஃதுள்ளுகுடியிருப்பு றோ.க.த.பாடசாலை, மன்ஃகட்டுக்காரன்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை, மன்ஃதலைமன்னார் பியர் அ.த.க.பாடசாலை, மன்ஃதமைன்னார் பியர் றோ.க.த.க.பாடசாலை மன்ஃதலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலை, மன்ஃசென்.லோறன்ஸ் றோ.க.த.க.பாடசாலை போன்றனவும் விளங்குகின்றன.

இவ்வாண்டில் தனது வைரவிழா ஜுபிலியைக் காணும் எமது மன்ஃபத்திமா மத்திய மகா வித்தியாலயம் இப்பெயரிற்; கடந்த இரு தஸாப்தங்கள் அளவாக இயங்கி வருகின்றதெனினும் பேசாலை றோ.க.ஆண்கள் பாடசாலை, பேசாலை றோ.க. கலவன் பாடசாலை, பேசாலை மகா வித்தியாலயம், மன்ஃபத்திமா ஆண்கள் பாடசாலை, மன்ஃபத்திமா மகா வித்தியாலயம் போன்ற பெயர்களை அதன் வளர்ச்சிப் படிகளில் பெற்று வளர்ந்து தற்போது மன்ஃபத்திமா மத்திய மகா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. எதிர்காலத்தில் மன்ஃபுனித பத்திமா மத்திய மகா வித்தியாலயம் (ஆNஃ ளுவ.குயவiஅய ஆயனாலய ஆயாய ஏனைலயடயலயஅ) என்ற பெயரைக் கொண்டு இயங்கும் சாத்தியக்கூறும் உள்ளது.

சர்வதேச வலைப்பின்னல் என்னும் ஒப்பற்ற தரவுத் தளமாகிய இணையத்தளத்தின் ஊடாக உலகின் எந்த ஒரு மூலை முடுக்கும் அதன் விசேட தன்மைகளும் எல்லோருக்கும் வெளிப்படை எனும் வகையில் உலகின் இலட்சக்கணக்;கான அமைப்புக்களையும், அவற்றின் உட்கட்டுமானம், பணிக்கூறுகள், தொடர்பாடல்கள் யாவற்றையும் நிரற்படுத்தி வைத்திருப்பதோடல்லாமல் அவற்றினோடு தொடர்புடையவர்களும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோரும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வகையிலும் தேவையான தகவல்களைப் பெற்றுத் தரவுநிரற் படுத்தும் வகையில் , வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்வோம். அந்த வகையில் எமது மன்ஃபத்திமா மத்திய மகா வித்தியாலயம் என்ற கல்வி நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை காலமும் பாடசாலை, பாடசாலைச் சமூகம் மிஞ்சிப் போனால் பாடசாலையைப் பற்றிய செய்திகள் உள்ளுர்ப் பத்திரிகைகளில் வெளியாதல்… என்றிருந்த நிலை மாறி எமது கல்லூரியும் சர்வதேச அரங்கில் இணையத் தளத்தின் ஊடாக வெளிக் கொணரப் படுவதையிட்டு அதன் முதனிலை முகாமையாளர் என்கின்ற வகையில் நான் பேருவகை அடைகின்றேன். இவ்விடயம் பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.. அன்றியும், இவ்விடயம் தற்போதைய எமது பாடசாலைச் சமுகத்துக்கு மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் தொழிலின் நிமித்தம் பரந்து வாழுகின்ற இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் யாவருக்கும் மகிழ்ச்சியளிப்பதோடு எமது பாடசாலையின் மட்டில் அவர்களுக்கிருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கவும் ஏதுவாகும்.

இந்நிலையில் இதற்குச் சந்தர்ப்பமளித்த இசுறுபாடசாலை நிகழ்ச்சித் திட்டத்திற்கும் அத்திட்டத்திற்குள் எமது பாடசாலையை உள்வாங்கிய மாண்புமிகு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுக்கும், பரிந்துரை செய்த மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு எம் ஆபேல் றெவ்வல் மன்னார் வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தற்போது யுனுடீ-நுமுளுP மாகாண முகாமையாளர்) திரு ளு.வு.பீரிஸ் ஆகியோருக்கும், எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் இசுறு பாடசாலை நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மதிப்பிற்குரிய ளு.டு.ஆ.னு. பியசேன அவர்களுக்கும் மற்றும் இணையத்தளத்தினுள் எமது பாடசாலையை உட்புகுத்தி அது சார்பான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை எமது பாடசாலைக் கணனி வள நிலைய ஆசிரியர்கள் திருமதி து.சு.அனுஸா, திருமதி து.து ஜுட ;மிராண்டா ஆகியோருக்கு வழங்கிய ளுஐடுஐனுயு நிறுவனத்திற்கும் அதன் பிரதம பயிற்றுனர் உயர்திரு றஞ்சித் குமாரசிறி அவர்களுக்கும் ஏனைய வளவாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.

எதிர்;வரும் நாட்களில் எமது பாடசாலை இவ்இசுறு பாடசாலைத் திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கின்ற நல்ல நிலைகளைப் பெற்று, வினைத் திறனும், விளைதிறனும் மிக்க ஓரு பாடசாலையாகத் திகழ வேண்டுமென்றும் அதற்கு எல்லாம் வல்ல இறைவனும், எமது பாதுகாவலியாம் புனித பத்திமா அன்னையும் அருள்பாலிக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்து, என் அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே, பழைய மாணவர்களே எமது பாடசாலையின் இந்த இணையத்தளப் பக்கங்களை எப்போதும் செழுமையாகவும், பயன்தரு விடயங்கள் பொதிந்ததாகவும் வைத்துக்கொள்ள உங்கள் அன்பார்ந்த ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்கின்றேன். உங்கள் பெறுமதி மிக்க ஆக்கங்கள், பாடசாலை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை எமக்கூடாக அதில் இணைத்துக்கொள்ள முன்வாருங்கள்.. இணையத்தளத்தில் எமது பாடசாலையின் பக்கங்களைக் கண்ணோக்கும் அன்பர்கள், துறைசார் வல்லுனர்கள் எமது இணையத்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் எம்மை இதன்பால் வழிப்படுத்தி ஊக்கப்படுத்தவும், அதிற் குறைகள், காலத்திற்கொவ்வாத விடயங்கள் காணப்படின் சுட்டிக்காட்டீத் திருத்திக்கொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

அன்புடன்,

சீ.எம்.சேவியர் பெர்னாண்டோ

பாடசாலை அதிபர்

[Source: http://www.mnfatimammv.sch.lk]

எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும்

கடல் வளமும், நில வளமும் நிரம்பப் பெற்றுள்ள இக்கிராமத்தில் முத்துக்குளித்த்ல், சங்கு குளித்த்ல் தொழில்களோடு மீன்பிடித்தொழிலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தென்னை, பனை, மரமுந்திரி வளத்தையும் அவற்றை மையமாகக் கொண்ட பல தொழில் வளத்தையும் இக்கிராமம் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் ஆரம்பக்குடிகள் அரேபிய வர்தகர்களினதும் தென்னிந்திய முஸ்லிம்களினதும் பரம்பரையைச் சார்த்வர்களாக இருந்து வந்திருப்பதால் இக்கிரமம் மிகவும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவிற்கும் எருக்கலம்பிட்டிக்குமிடையிலான வர்தக தொடர்புகளும், பிற தொடர்புகளும் இருந்து வந்திருக்கின்றன. இக்கிராமத்தில் காலத்திற்க்கு காலம் நடந்தேறி வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பல தென்னிந்தியர்களின் வம்சாவழித்தொடர்புகளைக்கூறும் வரலாற்று நூல்களிலும் இடம் பெற்றிருப்பதால் இக்கிராமம் அறியப்பட்டதாக உள்ளது. மார்க்க அறிவைப் பெறுவதற்காக எருககலம்பிட்டி மக்கள் பலர் தென்னிந்தியாவிற்குச் சென்று வந்திருந்தாலும் கீழக்கரை, தொண்டி அதிராம் பட்டினம், பெறிய பட்டினம், அம்மா பட்டினம், பாம்பன பட்டினம், வேதாளை போன்ற தென்னிந்திய முஸ்லிம்களோடு திருமண உறவுகளும் ஏற்பட்டிருந்தாலும் இக்கிராமம் மேலும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவிலிருந்தும், அரேபிய நாட்டிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், ஆத்ம ஞானிகளும், இறைநேசச் செல்வர்களும் இக்கிராமத்திற்கு வருகை தந்திருக்கின்றனர் அவர்களின் அடக்கஸ்தலங்களான கபுறடிகள் பல இங்கும், சூழவுள்ள பகுதிகளிலும் அமைந்திருப்பதாலும் இக்கிராமத்தின் தொன்மையை நன்கு விளங்க முடிகிறது. இவ்வூர் மக்கள் அயலிலிருந்து முஸ்லிம் கிராமங்களுடனும் கிருஸ்தவ, இந்து சமூகப்பழக்க வழக்கங்கள் பல இக்கிராமத்தின் பழக்கவழக்கங்களோடு பின்னிப்பிணையும் அளவுக்கு அன்னியோன்னியமாகப் பழகி வருகிறார்கள்.

அமைவிடம்

எருககலம்பிட்டிக் கிராமம் மன்னார்தீவின் வடக்கில் ஒரு குடாநாடு போன்று அமைந்துள்ளது. இதன் வடபுறம் பாக்கு நீரிணையின் ஒரு அந்தமாகவும், கிழக்குப் புறம் மன்னார்க் குடாக்கடலின் ஒரு கரையாகவும் அமைந்திருக்கின்றது. தென் புறத்தில் உள்ளாறு அமைந்திருக்கின்றது. இக்கிராமத்தின் மேற்குப் புறம் மன்னார்த்தீவின் எஞ்சிய நிலப்பரப்புடன் தொடர்புடையதாகவுள்ளது. ஏறக்குறைய 4 மைல் நீளமான கடற்கரை இக்கிராமத்தைச் சுற்றிக்கானப்படுகிறது. இக்கிராமத்தின் வடபுறத்தில் தென்னை, பனை ஆகியன செழித்து வளர்கின்றது. கிழக்குப்புறத்திலுள்ள நிலப்பரப்பில் பருத்தி, எள்ளு, குரக்கன், சாமை, வரகு, சோளம் போன்ற தானியங்கள் விளைவிக்கப்பட்டுவந்த புஞ்செய் நிலமாக இருந்து வந்திருக்கின்றது. ஒவ்வாத காலநிலையின் காரணமாக அத்தகைய விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டமையால் அப்பகுதி உடை மரங்களும், இதர முட்புதர்களும் நிறைந்த காடாக மாறியுள்ளது. சில பகுதியிலிருந்து காடுகள் அழிக்கப்பட்டுத் தென்னைச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கடல் வழியாக விடத்தல்தீவு, இலுப்பக்கடவை, பலவமுனை, இரணைதீவு, நாச்சிக்குடா, ஆகிய பகுதிகளையும் கச்சத்தீவு, இந்தியாவின் கரையோரப்பட்டினங்களான இராமேஸ்வரம், கீழ்க்கரை, நாகூர், நாகபட்டணம், தொண்டி ஆகிய இடங்களையும் சென்றடையலாம். அரைவறள் வலையத்துள் இக்கிராமம் அமைந்திருப்பதால் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையும் வீசும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறுகிறது. ஆகவே இக்கிராமத்தின் மழைவீழ்ச்சி மன்னார் மாவட்டத்தின் மழை வீழ்ச்சியான 1250mm. சராசரி வெப்பம் 27.8OC ஐயும் கொண்டுள்ளது

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வீச ஆரம்பிக்கும் மே மாதம் ஆரம்பத்தில் இடியுடன் கூடிய மேற்காவுகை மழையையும் இடைக்கிடையே இக்கிராமம் பெருகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வறண்ட காற்றாக அதிவேகத்துடன் மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை வீசும். இக்கிராமம் உடை மரத்துடன் கூடிய முற்பற்றைக் காட்டையும் ஆவாரை, எரிக்கலை, ஆல, இத்தி, கருக்குவாச்சி, நாவல் போன்ற மரங்களையும் தென்னை, பனை, மரமுந்திரி ஆகிய தாவரங்களையும் கொண்டுள்ளது. கடற்கரையோரங்களில் கன்னா, தாழை, உவரி போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. மாடு, ஆடு, எருமை, குதிரை, கழுதை, மான், நரி போன்ற மிருகங்கள் இங்குள்ளன.

ஏறககுறைய ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள நிலப்பகுதியில் 10000க்கு அதிகமான மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியாக இக்கிராமம் அமைந்திருப்பதுடன், இது ஒரு தனி முஸ்லிம் கிராமமாக ஆரம்ப காலம் முதல் நிலைத்து வந்திருக்கிறது. எருக்கலம்பிட்டிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தாராக்குண்டு, புதுக்குடியிருப்பு, கரிசல் ஆகிய கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொதுவாகவும் இலங்கைவாழ் முஸ்லிம்கள். அனைவருக்கும் தனிப்பெரும் சொத்தாகவும் 1944ல் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியொன்று அமைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கல்லூரியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியாலும் அவ்வாண்டு அக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான மகா வித்தியாலயத்தின் அளப்பரிய சேவையாலும் எண்ணிறந்த முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் இன, மத பேதமின்றிக் கல்வி அளிக்கப்பட்டது.

அதனால் பலரும் பல்வேறுபட்ட பதவிகளில் இலங்கையில் பரவலாகச் சேவையாற்றி வருவதோடு பலர் வெளிநாடுகளிலும் சேவையாற்றி வருகின்றனர். இத்தகைய காரணங்களால் எருக்கலம்பிட்டி என்ற இக்கிராமமும் அதன் அமைவிடமும் துல்லியமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

[http://www.erukkalampiddy.com/en/history/mannar/introduction.html?showall=1]

மன்-நானாட்டான் மகா வித்தியாலையம்-மன்னார்


மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது மன்-நானாட்டான் மகா வித்தியாலைய பாடசாலை.இப்பாடசாலை பல்வேறு தடைகளையும் தாண்டி பல்வேறு வசதிக்குறைபாடுகளுடனும் இயங்கி வந்த போதும் தற்போது குறித்த பாடசாலை மாவட்டத்தில் பெயர் சொல்லக்;கூடிய வகையில் கல்வி,விளையாட்டு,கலை நிகழ்வுகள் போன்ற துரைகளில் இன்று சாதனை படைத்து வருகின்றது.
பாடசாலையின் வரலாறு.

1901 ஆம் ஆண்டு அடைக்கல அன்னை தேவாலயத்தின் தென்புறத்தில் கிடுகினால் வேயப்பட்ட சிறு பள்ளி ஒன்று அமைக்கப்பட்டது.

1938 ஆம் ஆண்டு இப்பாடசாலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

1940 ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் 3 அடிச்சுவர் வரை தூண் எழுப்பி தகரத்தினாலான கூரையுடன் பாடசாலை அமையப்பெற்றது.

1950 ஆம் ஆண்டு முதல் முதலாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 3 மாணவர்கள் சித்தி பெற்றமை இப்பாடசாலையின் முதல் மைல் கல்லாகும்.அவ்வாண்டே இப்பாடசாலை தரம் 8 வரை தரமுயர்த்தப்பட்டது.

1960 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரம் வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.அது வரை காலமும் கத்தோழிக்க திருச்சபையின் கீழ் அப்பாடசாலை நிர்வகிக்கப்பட்டு வந்தது.

1961 ஆம் ஆண்டு அரச பொது நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை கொண்டு வரப்பட்டதினால் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையாக பெயர் பெற்றது.

1971 ஆம் ஆண்டு ‘வாழ்கலை எம்பதி’ என்னும் பாடசாலைக்கீதம் இயற்றப்பட்டது.

1972 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் வரை உயர்த்தப்பட்டு கலை,வர்த்தகத்துறை ஆகிய வகுப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1991 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த போது இப்பாடசாலை பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1994 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிபராக திருமதி ச.சந்தாம்பிள்ளை அவர்கள் கடமையேற்று பாடசாலையின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.

1997 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிபராக திரு.திபுசியஸ் பீரிஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.இவரின் காலத்தில் இப்பாடசாலை கலைத்திட்ட விருத்தியில் வளர்ச்சி பெற்றமை சிறப்பு அம்சமாகும்.

1999 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிராக திரு.தி.ஜெகநாதன் அவர்கள் பொறுப்பேற்றார்.இக்காலகட்டத்தில் இப்பாடசாலை பௌhதிக வளர்ச்சியிலும்,கலைத்திட்ட வளர்ச்சியிலும் மிளிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இப்பாடசாலையின் அதிபராக அருட்சகோதரர் எஸ்.இ.றெஜீனொல்ட் எப்.எஸ்.சி அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.2009 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 8 ஆம் திகதி அப்பாடசாலையின் அதிபராக இவர் பொறுப்பேற்றார்.இன்று முதல் இன்று வரை இப்பாடசாலை பல்வேறு சாதனைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.

விளையாட்டுச் செயற்பாடுகள்.

2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இப்பாடசாலையின் விளையாட்டுச் செயற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது.

இப்பாடசாலையின் வருடாந்த இல்ல வினையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது.
ஆண்,பெண் இருபாலாறும் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் விளையாட்டுப்போட்டிகளில் பங்கெடுப்பதனை காணக்கூடியதாக உள்ளது.இப்பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில்,மாகாண மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை

இப்பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் ஒவ்வரு வருடமும் பல மாணவர்கள் சித்தியடைகின்றனர். பரிட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களில் பலர் இவ்வாறு சித்தியடைகின்றனர்.கடந்த காலங்களை விட 2010 ஆம் ஆண்டு முதல் இந்த முன்னேற்றம் இப்பாடசாலையில் காணப்படுகின்றது.

தமிழ் தினப்போட்டி

கடந்த வருடங்களை விட தற்போது எமது பாடசாலை மாணவர்கள் வலய மட்ட தமிழ் தினப்போட்டியில் ஆக்கம் எழுதுதல்,கட்டுரை வரைதல்,இலக்கியம் நயத்தல்,குறநாடக ஆக்கம்,இலக்கணப்போட்டி கவிதை ஆக்கம்,இலக்கிய நாடகம்,திறந்த போட்டி,வாசிப்பு,ஆக்கத்திறன் வெளிப்பாடு உற்பட பல நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் வலய,மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டம் வரை சென்றுள்ளனர்.
கிறிஸ்தவ சமய நிகழ்வுகள்

இக்கல்லூரியின் ஆன்மீக செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் முகமாக இலக்கிய மன்றங்கள் இயங்கி வருகின்றது.இதற்காக பொறுப்பாசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இம்மன்றம் மாதம் ஒரு தடவை கூடி தங்கள் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.தவக்காலத்தில் ஒவ்வெரு சௌ;ளிக்கிழமையும் விசேட ஆராதனைகளும் நடாத்தப்படுகின்றது.ஒவ்வெரு வருடமும் ஒளிவிழா நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.தரம் 11 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு தியானங்களும் இடம் பெற்று வருகின்றது.

இந்து மன்றம்

இக்கல்லூரியில் கல்வி கற்கின்ற இந்து மாணவர்களின் ஆண்மீகம்,ஒழுக்கம் ஆகிய செயற்பாடுகளை மேலும் வலுவூட்டும் விதமாக இக்கல்லூரியில் இந்து மன்றம் இயங்கி வருகின்றது.

இம்மன்றம் வாணி விழா நிகழ்வினை மிகவும் சிறப்பாக வருடா வருடம் கொண்டாடி வருகின்றது.
இதன் மூலம் மாணவர்களின் கலை ஆற்றலையும்,தலைமைத்துவ திறனையும் வளர்க்கக்கூடியதாக உள்ளது.
தினந்தோரும் பாடசாலையில் காலை வழிபாட்டிற்கு மாணவர்களை தயார் படுத்தி ஆண்மீக செயற்பாட்டை வளர்ப்பதில் இம்மன்றம் பெரும் உறுதுணை புரிகின்றது.

மனைப்பொருளியல் மன்றம்

மனைப்பொருளியலானது ஏனைய பாடங்களைப்போல ஒரு முக்கியமான பாடமாகவும்,வாழ்க்கைக்கு இன்றி அமையாத ஒன்றாக ஆண்,பெண் வேறுபாடுகளின்றி கற்றறிந்து வாழவேண்டிய பாடமாக உள்ள போதிலும் பலரால் அது உணரப்படவில்லை.

உணவைப்பற்றி அதனை எவ்வாறு போசனைக்கூறியதாக்கி அளவறிந்து உண்பதனால்நோயற்ற வாழ்க்கை வாழலாம் என்பதை அறிவுறுத்தும் பாடமாக இது அமைந்துள்ளது.

வளர்ந்து வரும் எமது பாடசாலையில் மனைப்பொருளியல் பாடத்தைக் கற்கும் மாணவர் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.க.பொ.த உயர் தர வகுப்பிலும் 2010 ஆம் ஆண்டு மனைப்பொருளியல் பாடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.

-பாடசாலை நூலகம்.

-இன்றைய கலைத்திட்ட மாற்றங்களுடன் இணைந்த வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் அங்கமாக பாடசாலை நூலகத்தின் முக்கியத்துவம் உரப்பட்டுள்ளது.இந்த வகையில் எமது பாடசாலை நூலகமும் கல்வித்துரையிலான உன்னத நிலையை அடைய வழியமைத்து வருகின்றது.

எமது பாடசாலை நூலகமானது ஆரம்ப காலங்களில் ஒரு வகுப்பரைக்கட்டிடத்தில் குறைந்தளவிலான நூல்களுடன் இயங்கி வந்தது.பின் 27-07-2009 ஆம் ஆண்டு தொடக்கம் மாடிக்கட்டிடத்தில் சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்றது.எமது நூலகத்தில் தற்போது 1500 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்படுகின்றது.இந்த நூலகத்தில் உள்ள பல நூல்கள் பலரினால் வழங்கப்பட்டவையாகும்.

பாண்ட் வாத்திய இசைக்குழு

இப்பாடசாலையில் பாண்ட் வாத்திய இசைக்குழவானது 1998 ஆம் ஆண்டு தொடக்கம் இன்ற வரை சிறப்பாக இயங்கி வருகின்றது.பாடசாலையில் இடம் பெறுகின்ற விளையாட்டுப்போட்டி,ஆசிரியர் தினம்,உற்பட சகல நிகழ்வுகளுக்கும் வருகை தருகின்ற விருந்தினர்களை வரவேற்பதற்கும்,குறித்த நிகழ்வுகளை சிறப்பிப்பதற்கும் இந்த பாண்ட் வாத்திய இசை இசைக்கப்படுகின்றது.

இப்பாடசாலை மாணவர்களுக்கு மேலைத்தேய பாண்ட் வாத்தியக்கருவிகள் குறைவாகக்காணப்படுகின்றமையினால் இருப்பதை வைத்துக்கொண்டு அவ்வப்போது அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் புதிய பாடல்களும் இசைக்கப்படுகின்றது.

கா.பொ.த சாதாரண தர,உயர் தர வகுப்புக்கள்

இப்பாடசலையில் கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரிட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களில் அதிகலவில் சித்தியடைகின்றனர். கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் அதிகலவானவர்கள் உயர் தரம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுகின்றனர். கா.பொ.த உயர் தர பரிட்சைகளுக்கு தோற்றுகின்ற பல மாணவர்கள் பல்கலைக்கலகம் வரை செல்லுகின்றமை மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.

இப்பாடசாலைக்கு உதவி வழங்கனர்.

இப்பாடசாலையில் பௌதிக வழங்களைப்பொருத்தரவரையில் பலரது உதவிகள் எமக்கு கிடைத்துள்ளது.மன்னார் வலயக்கல்வி அலுவலகம்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரச சார்பற்ற அமைப்புக்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர் ஆகியோர் இப்பாடசாலைக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இப்பாடசாலையின் பழைய மாணவர்களும் இப்பாடசாலைக்கு தம்மாலான உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.

இப்பாடசாலையில் கிறிஸ்தவ ,இந்து,முஸ்ஸிம் மாணவர்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் கல்வி கற்று வருகின்றமையும் இப்பாடசாலையில் சிறப்பிற்கூறிய விடையமாக காணப்படுகின்றது.

[Source:MannarWin.com]

மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம்

மன்னார் நகர சபை மன்னாரில் கடந்த 200 வருடங்களாக வாழ்ந்து வரும் சுமார் 500 ற்கு மேற்பட்ட கழுதைகளை, அதன் உச்ச பயனை பெறுமுகமாக ஆலோசனைகளை கடந்த 5 மாதங்களாக நாடாத்தி வந்தது. இதன் பயனாக “அவுஸ்திரேலியா டயஸ்போரா லங்கா” வின் உதவி கோரப்பட்டபோது அவர்கள் பல வெளிநாட்டு மிருக வளர்ப்பு சங்கங்களுடனும, ; கால்நடை பாதுகாப்பு வைத்தியர்களுடனும் கலந்துரையாடியதின் பேரில் அனாதரவான மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம் ஏற்பட்டுள்ளது.
இதன் முன்னோடியாக கார்த்திகை 07, 08, 09ம் திகதிகளில் இந்தியாவிலிருந்து மூன்று ஆலேசகர்கள் மன்னாரிற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இக்குழுவின் தலைவராக இந்தியா புதுடில்லியைச் சேர்ந்த திரு. வினோத் கருணா அவர்களும், செல்வி இராம் பர்வின் சமூக சேவையாளரும், கல்வி தொடர்பதிகாரியும், சென்னையைச் சோர்ந்த வைத்திய கலாநிதி ரமேஸ் அவர்களும், இத்துடன் அவுஸ்திரேலியா டயஸ்போரா லங்காவின் தலைவர் திரு. ஜெரமி லியனகே அவர்களும், சமூகமளித்திருந்தனர்.

இவர்கள் கடந்த 3 தினங்களில் மன்னார் அரச அதிபர், மன்னார் நகர சபை தலைவர், செயலாளர், நகர வபை ஊழியர்கள், மன்னார் கால்நடை வைத்தியர், பொதுசுகாதார பரிசோதகர்கள், கழுதை வளர்ப்பு இளைஞர் குழுத் தலைவர் திரு. மயூரன், திரு. சயந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி போன்றவர்களை சந்தித்ததுடன் கிராமிய மட்ட அமைப்புக்களான சாந்திபுரம் மாதர் சங்கம், எழுத்தூர் சலவைத் தொழிலாளர் சங்கம், மன்னார் பழைய புகையிரத நிலையபொதுமக்கள், மன்னார் மாற்றாற்றல் புனர்வாழ்வு அமைப்பு (ஆயுசுனுயுP) உத்தியோகத்தர்கள், மன்னார் வர்த்தகர்கள், நகரில் உள்ள பிரயாணிகள், ஏனைய பொதுமக்கள் போன்றவர்களிடம் கேள்வி கொத்து மூலமாகவும், கழுதைகளின் பிரயோசனங்கள் பற்றி பயிற்சியளித்ததன் மூலமும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ் ஆய்வின் மூலம் மன்னார் மக்களில் ஒரு சிலர் கழுதைகளின் பிரயோசனத்தை அறிந்து கொண்டதுடன் இவற்றை பராமரிப்பதன் மூலம் கழுதைகளின் உச்ச பயனை பெறமுடியுமென நம்பிக்கை தெரிவித்தனர்.
கழுதையின் பால் அதிக புரதம் கொண்டதாகவும் நலிவுற்ற குழந்தைகளுக்கு ஒரு சத்துள்ள உணவாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதே~;, ஈரான், ஆபிரிக்கா, ஜக்கிய ராட்சியம் போன்ற நாடுகளில் உபயோகிப்பதாகாவும். கழுதைகள் பராமரிப்பு சங்கம் இந்தியாவில் 1998 ழும், எகிப்து, எத்தியோப்பியா, மெக்சிக்கோ, தண்சானியா, தென்னாபிரிக்கா, உகண்டா, சிம்பாவே, யமேக்கா, பேரு, சீனா போன்ற இடங்களில் 2000ம் ஆண்டுகளில் கழுதை பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும். இதுவரை 4000 ற்கும் மேற்பட்ட கழுதைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணியுள்ளாதாகவும்,

கழதைகளுக்கான பராமரிப்பு இல்லங்கள் உலகில 1973ல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பன்னிரெண்டாயிரத்திற்கும் (12, 000) மேற்பட்ட கழுதைள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும். ஜக்கிய இராட்சியம் உலகின் 8 வது கழுதை பராமரிப்பு நாடாக திகழ்வாதாகவும், அகில உலகல 342 ஊழியர்கள் தொழில்நுட்பம், வைத்தியம், ஆலோசனை. பயிற்சி போன்றவற்றை நடாத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

இறுதியில் சாந்திபுரம் மாதர் சங்க உறுப்பினர்கள், மன்னார், எழுத்தூர் சலவைத் தொழிலாளர் சங்க ஊழியர்களும், மன்னார் பழைய புகையிரத நிலைய பொதுமக்களும், மன்னார் நகர சபை உறுப்பினர் ஒர்சிலரும், விN~ட தேவைகளுக்குட்பட்டோர் புனர்வாழ்வு (ஆயுசுனுயுP) உறுப்பினர்களும், மன்னாரில் உள்ள ஒரு சில கழுதைகளுக்கு குடி நீர் வழங்கியும், உணவு வழங்கியும், அதை ஓர் வளர்ப்பு பிராணியாக ஒரு சில மாதங்களில் மாற்ற முடியும் எனவும் பின்பு அதன் பின்னங்கால்களை பிணைத்து விடுவதன் மூலம் அவற்றின் ஓட்டத்தை குறைத்து விட முடியும் எனவும் பின்பு அதனை தடவி கொடுத்து அதற்கு ஒர் பெயர் வைத்து 4 – 6 மாதங்களில் அதை ஒர் செல்ல பிராணியாக மாற்றமுடியுமென கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு இந்தியா ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதன் பின் அதன் வாய்க்கு கடிவாளம் இட்டு ஆடு, மாடு, குதிரைகள் போன்று பல வேலைகளுக்கு அதை உபயோகிக்க முடியும். சாரசரி ஓர் கழுதை 80 – 120 கிலோ கிராம் நிறையுடையதாகவும் 30 – 50 கிலோ கிராம் பொதி சுமக்க கூடியதாக உடலமைப்பு கொண்டுள்ளதாகவும். அதன் கால்கள் கற்பாறைகளிலும், உயரமான மேட்டிலும், உயர்ந்த கட்டிட படிகளில் ஏறக்கூடியவாறும் நன்கு பலம் உள்ளதாக அமைந்துள்ளது.

படைப்புக்களில் ஒரேயொரு இம்மிருகம் தனது தலையில் இருந்து முதுகு வரையும், வலது காலில் இருந்து இடது கால் வரையும் குருசு போன்ற வெள்ளை அல்லது கறுப்பு அடயாளங்களை கொண்டுள்ளது.

இதன் சாணம் நுளம்புஇ கொசுக்கள்இ ஈக்கள் போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்;தி உள்ளது இவற்றை புகைய10ட்டுவதன் மூலம் பாதுகாப்பளிக்க முடியும். ஆபிரிக்க நாடுகளில் இவற்றின் இறைச்சியை உண்ணுகின்றனர்.

மன்னாரில் 50 வருடங்களுக்கு முன்பு சலவைத் தொழிலாளர்கள் தமது பொதிகளை கழுதையில் ஏற்றியுள்ளதாகவும், மீனவர்கள் வீட்டில்லிருந்து கடலுக்கு வலைகளையும. பிடிக்கப்பட்ட மீன்களையும, சந்தைக்கு கொண்டு வரவும், விறகு வெட்டி பிழைக்கும் மக்கள் காடுகளில் விறகு வெட்டி சுமந்து கெண்டு வந்ததாகவும், மன்னார் கோட்டையை கட்டவதற்கு திருக்கேதீஸ்வரத்தில் இருந்து முருகைக் கற்கள் கழுதையில் கொண்டு வந்ததாகவும் சான்றுகள் பகர்கின்றன.

மேலும் ஜக்கிய ராட்சியத்தில் இருந்து கழுதைகள் புனர்வாழ்வு நிபுணர்கள் ஜந்து பேர் அடுத்த மாதம் மன்னாரிற்கு வருகை தரவுள்ளனர்.

இதனால் வேண்டப்படாத மிருகமாக ஒதுக்கி விடப்பட்ட மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம் பிறக்குனெ மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.