Fr Xavier Croos

Rev.Fr. Xavier Croos, the former Vicar General & Present Director of Minor seminary is celebrating his 50 years priesthood.

Fr Xavier Croos, the former Vicar General & Present Director of Minor seminaryநான் கண்ட தலைமைத்துவமும், ஆளுமையும்; நிறைந்த வண.பிதா சேவியர் குரூஸ் அடிகளார்:

வண.பிதா.சேவியர் குரூஸ் அடிகளாரை நான் யாழ் புனித அடைக்கல நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தையாக 1980ம் ஆண்டுகளில் சந்திக்கக் கிடைத்தது. நான் யாழில் பிறந்து மன்னாரில் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னார் வங்காலையில் பிறந்து யாழில் கடமையாற்றிய அடிகளாரைக் கண்டபொழுது பாச உணர்ச்சியினால் ஈர்க்கப்பட்டேன். தந்தை அவர்கள் மாற்றலாகி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பங்குத் தந்தையாக கடமையாற்றிய பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மன்னாரில் பல முயற்சிகளில் ஈடுபட்டு மன்னார் மக்களை விளிப்படையச் செய்யவேண்டும் என்று ஆவல் கொண்ட எனக்கு கடந்த 30 வருடங்களாக பக்கபலமாக ஊக்கப்படுத்திய தந்தையவர்களை எனது சொந்தத் தந்தையாக கருதுகிறேன். 1983ம் ஆண்டுகளில் மாதாவின் இறுதி நாளில் அவர் தலைமையில் கத்தோலிக்க மக்களை ஒன்று திரட்டி ஆயிரம் மெழுகுவத்திப் பவனி ஒன்றை பக்;திப் பரவசத்துடன் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடாத்திய பெருமை அவரைச் சார்ந்தது, 1984ம் ஆண்டு இறுதியில் தமிழ்ப் போராளிகளினால் மன்னார் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடைக்கலம் தேடி மன்னார் கோட்டைக்கும், தள்ளாடிக்கும் சென்றபோது, மன்னார் மின்சாரம் இன்றி, குடிநீர் இன்றி அரச அதிகாரிகளும் கடமை செய்ய முடியாதவாறு, கோவில்களிலும், வைத்தியசாலை, பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தபோது, இராணுவத்தினர் பீரங்கிகளால் சுட்டு மன்னார் நகரைக் கைப்பற்றியபோது எங்கும் பதற்றம் நிறைந்த வேளையில், நான் பங்குத் தந்தை சேவியர் குரூஸ் அடிகளாரை அணுகியபோது இராணுவத்தை தள்ளாடியில் இருக்குமாறும் மன்னார் நகரிலுள்ள பாதை தடைகளை அகற்றுவதாகவும் கூறி ஓர் சில நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையம், கோட்டை, மன்னாரின் நாற் சந்திகளில் உள்ள தடைகளை அகற்றி மன்னார் கடைத்தெரு இராணுவத்தினரால் எரிக்கப்படாமல் இருக்க துணிவுடன் செயற்பட்ட செயல்வீரன் சேவியர் குரூஸ் அடிகளாராகும். இக்காலப் பகுதியில்தான் மன்னார் மக்களுக்கு சேவையாற்ற அரச அதிகாரிகளை நம்பியிராது மன்னார் மக்களினால் ஓர் சங்கம் உதயமாக வேண்டும் என கனவு காணப்பட்டது. இதன் முன்னோடியாக 08-06-1985ம் ஆண்டு ஆறு நபர்கள் புனித செபஸ்தியார் குரு மனையில் ஒன்றுகூடி ம.து.ம.ச சங்கத்திற்கு உருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பயனாக 20-07-1985ம் ஆண்டு தற்;போது மன்னார் நகர சபையாக விளங்கிய நாதன் படமாளிகையில், மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டம் நடைபெற்று அதில் கலந்துகொண்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களால் ஏகமனதாக ம.து.ம.ச வின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஓவ்;;;;n;வாரு இரு வருடங்களில் ஒருமுறை நடைபெறும் ஆண்டுக் கூட்டங்களில் மீண்டும் மீண்டும் ஏகமனதாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இற்றைவரை ம.து.ம.ச வின் தலைமைப் பொறுப்பை ஏற்று 26 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவருடன் செயலாளராகக் கடமையாற்ற கிடைத்த காலத்தில் ம.து.ம.ச வின் சோதனைகள், வேதனைகள் நிறைந்த காலத்தை எண்ணிப் பார்க்கின்;றேன். 1985 இறுதிக்காலப் பகுதியில் வன்னியில் யுத்தத்தினால் மக்கள் இடம்பெயர்ந்து மன்னாருக்கு வருகை தந்தபோது தன்னை முழுமையாக துயர்துடைப்பு பணியில் ஈடுபடுத்தினார். மீனவ மக்களின் மறுவாழ்வு பணிக்காக நோர்வே அகதிகள் புனர்வாழ்வு கழகத்துடன் இணைந்து 250 மேற்பட்ட வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் போன்றவற்றை 4 பேர் கொண்ட குடும்பங்களுக்கு மானியமாக வழங்கினார். இக்கடன் காசுகளை சேகரிப்பதற்காக தலைமன்னார், பேசாலை, ஓலைத்தொடுவாய், எருக்கலம்பிட்டி போன்ற இடங்களில் கடும் வெயிலையும் பாராது குடைபிடித்தவாறு என்னுடன் நடந்து வந்ததை நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்க்கின்றேன். எமது மக்கள் போரின்போது அடிக்கடி இந்தியா செல்வது வழக்கம். அப்பொழுது நாம் வழங்கிய வள்ளங்களில் அகதிகளாக இந்தியா சென்று வள்ளங்களையும் இழந்து தமது உடமைகளையும் இழந்து தவித்தபோது எமது மீனவர் திட்டம் பெரும் சோதனையை எதிர்கொண்டது, மீண்டும் எம் இனத்தவர்கள் நாடு திரும்பியபோது ருNர்ஊசுஇ ணுழுயுஇ யுருளுயுஐனு இ ளுஊகு(ருமு) போன்ற ஸ்தாபனங்கள் மூலம் இவர்களை வரவேற்று தற்காலிக வீடுகள், மலசல கூடங்கள் வாழ்வாதார உதவிகள் போன்றவற்றை அமைத்து அவர்களை வாழவைத்து மகிழ்ச்சிகரமான சம்பவத்தை எண்ணிப் பார்க்கின்றேன். அடிகளாரின் தலைமையின் கீழ் 260 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் இருந்து கல்வி கற்று வெளியேறுவதையும், 200 மேற்பட்ட தாய்,தந்தை அற்ற சிறார்கள் மாதாந்த உதவி பெற்று கல்வி கற்பதையும் 3000 மேற்பட்ட வறிய மாணவர்கள் பாடசாலை உபகரணங்கள், சீருடைகள் பெற்றதையும் 100 மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்பதையும் மகிழ்ச்சியுடன் எண்ணிப் பார்க்கின்றேன். மேலும் அடிகளார் அவர்கள் குருமுதல்வராக பதவி உயர்வு பெற்றபோது மன்னார் மக்களுக்காக பல ஸ்தாபனங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தரிசித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி பெற்றுத் தந்ததை நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றேன். தற்போது சிறிய குருமடத்தின் அதிபராக கடமையாற்றும்போது பாதிக்கப்பட்ட மக்களை ஒவ்வொரு புதன்கிழமையும் தரிசித்து அவர்களுக்குத் தேவையான துயர் துடைப்புப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள் போன்றவற்றை சாதி சமயம் பேதம் பாராது நடுநிலை வகித்து வழங்கி வருவதை மன்னார் மக்கள் நன்கு அறிவார்கள். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தந்தையவர்களுடன் சேவையாற்றக் கிடைத்ததை பெரிதும் பாக்கியமாக கருதுகின்றேன். தகவல் திரு.சின்கிளேயர் பீற்றர்