மன்னார் பிரஜைகள் குழுவின் மனிதநேய பணிகள்

மன்னார் பிரஜைகள் குழுவின் மனிதநேய பணிகள்.

கடந்த யுத்தத்தினால்     இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, முக்கிய ஆவணங்களை இழந்து, பெரிதும் கஷ்டப்படுவதை உணர்ந்த மன்னார் பிரஜைகள் குழு கடந்த
ஆறு மாதங்களாக துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது.

இதனடிப்படையில் 12 வலுவூட்டல் பயிற்சிகள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்று வந்தது. பாலப்பெருமாள்கட்டு, சன்னார், இரனை இலுப்பைக்குளம், குஞ்சிக்குளம், தலைமன்னார், பாப்பாமோட்டை, மடுவீதி, கூராய், பெரியபண்டிவிரிச்சான், அடம்பன், முள்ளிக்குளம், கன்னாட்டிää

இதில் 350 மேற்பட்ட மாதர்சங்கங்கள், கிராமிய அமைப்புக்கள், ஊனமுற்றோர், சிறையில் இருந்து மீண்டோர், குடும்ப உறவினரை இழந்த உறுப்பினர்கள், போன்றோர் கலந்து பயன்பெற்றனர்.

மேலும் முக்கிய ஆவணங்களை பெறுவதற்காக ஆறு நடமாடும் சேவையும், மன்னார் அரச அதிபர், உதவி அரசாங்க அதிபர், மாவட்ட பதிவாளர், போன்றோரின் உதவியுடன் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது. ஆண்டாங்குளம், கள்ளியடி, இரனை இலுப்பைக்குளம், தலைமன்னார், மடுவீதி, வெள்ளாங்குளம்ää

இதன்மூலம் 1,416 பொதுமக்கள் தமது முக்கிய ஆவணங்களான இறப்பு, பிறப்பு, திருமணம் ஆகிய அத்தாட்ச்சிப் பத்திரங்களுக்கு  விண்ணப்பித்து 52மூ ஆவணங்கள் கிடைக்கப்பெற்றும் 31மூ மானோருக்கு பதிவுகள் இல்லை என பதில் கடிதம் வந்துள்ளது, இவர்கள் தமது பகுதி பிரதேச செயலாளர் மூலமும், மாவட்ட பதிவாளர் மூலமும், மீண்டும் விண்ணப்பித்து புதிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரஜைகள் குழு திட்ட உத்தியோகத்தர் அறியத் தருகின்றார்.

மேலும் நடமாடும் சேவையின் மூலம் 30 ற்கு மேற்பட்ட காலங்கடந்த திருமணங்களும், 14 ற்கு மேற்பட்ட காலங்கடந்த பிறப்புக்களும், பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கமை.

இத்திட்டத்திற்கு உதவி வழங்கிய சகல பாடசாலை அதிபர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும், பிரஜைகள் குழு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல்

திரு, சின்கிலேயர் பீற்றர்,
திட்ட உத்தியோகத்தர்.