SL Catholic Proffessionals Forum

மன்னார் கத்தோலிக்க உயர் பதவி பணியாளர் ஒன்று கூடலின் போது அறிந்து கொண்டவை இலங்கை ஆயர் பேரவையின் அநுசரணையுடன் பொதுநிலையினரின் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிட கத்தோலிக்க உயர் பதவி பணியாளர் சிறப்பு கருத்தரங்கில், மன்னார் மறை மாவட்டத்தில் இருந்து ஆறு கத்தோலிக்க கல்விமான்கள் கலந்து கொண்டனர்.

இதற்கு மன்னார் மறை மாவட்ட பொதுநிலையினரின் ஆணைக்குழு பொறுப்பாளர் அருட்பணி.S.K. தேவராஐ அடிகளார் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கு கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் புரட்டாதி மாதம் 2,3,4ம் திகதிகளில் பாப்பாண்டவரின் இலங்கை பிரதிநிதி அதிவந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசப் ஸ்பிட்ரி தலைமையில,; 11 மறை மாவட்டங்களைச் சோர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

ஆண்டகை அவர்கள் தமது வரவேற்புரையில் கிறிஸ்தவர்களாகிய உயர் பதவி வகிக்கும் கல்விமான்கள், இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று, கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்வதற்கும், விவிலியத்தின் கோட்பாடுகளுக்கு அமைந்து நடக்கவும், எவ்வேளையிலும் கிறிஸ்தவ விழுமியங்களை அநுசரிக்கவும், சாதி, சமய பேதம் பாராது பல்லிணத்தவர்க்கு அதிகார தோரனையின்றி, பணியாளனாக சேவையாற்ற அழைப்பு விடுத்தார்.

இக்கருத்தரங்கில் பல உயர் சிறப்பு பட்டங்கள் பெற்ற ஆயர்கள், அருட் தந்தையர்கள், பொதுநிலையினர் உரையாற்றி குழு கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இறைவனிடம் மன்றாடுவது எப்படி என்று குருமட விரிவுரையாளர் அருட் தந்தை பேயிலன் பெரேரா.S. J விளக்குகையில் ………

மன்றாடுவதின் நோக்கம்: இதற்கு ஓர் குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நேரம், காலம் இருப்பதுடன் இச்செயல் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் ஓர் வழிதவறா செயற்பாடக இருத்தல் வேண்டும் எனவும் அதுவே இறைவனுக்கு உவப்பானது என்றார்.

எவ்நிலையில் மன்றாடுவது: எமது சேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக மன்றாடும்போது, மனதில் மனஆறுதல், தேறுதல், மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஏற்படக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

மன்றாட்டின் வகைகள்: இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று வேறு வேலைகள் இல்லாதபோது, ஓய்வு நேரத்தில் மன்றாடுவது – இவை இளக்கமான மன்றாட்டு எனவும,; இறைவனுக்கென நேரம் ஒதுக்கி ஓர் குறிப்பிட்ட இடத்தில் உள்ளம் உருகி இறைவனை மன்றாடுவது – உறுதியான மன்றாட்டாகும்.

எவ்வாறு மன்றாடுவது: நாம் தனிமையில் இறைவனை நோக்கி தந்தை மகன் உறவில் மன்றாடும்போது அது இறைவனுக்கு உவப்பானதாகும். ஏனனில் யேசுநாதர் தாம் வாழ்ந்த நாட்களில் ஓர் குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு உவப்பான இடத்தில் (மலைகள், குன்றுகள்) பரம பிதாவை நோக்கி அப்பா, பிதாவே என கூவி அழைத்து மன்றாடியதாக வேதம் சொல்கிறது.

எவ்வளவு நேரம் மன்றாட வேண்டும்: குறைந்த தேவைகளை நாம் மன்றாட்டு மூலமாக கேட்கும்போது குறைவாக கொடுக்கப் படுவதாகவும், அதிக நேரம் ஆழ்ந்து மன்றாடும்போது அதிகம் கொடுக்கப்படுவதாகவும் வேதம் சொல்கிறது.

எவ்வாறு மன்றாடுவது: எமது ஐம்புலங்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி, உள்ளத் தூய்மiயுடன், உள்ளத்தின் ஆழத்திலிருந்து, நம்பிக்கையுடன் கேட்கும்போது இறைவன் தம்மை நம்பினவர்களை கைவிடமாட்டார் என வேதம் சொல்கிறது.

மன்றாட்டின் குறிக்கோள்: இறைவனின் மேல் உள்ள அன்பினால் தந்தை மகன் ஃ மகள் உறவாடல் மூலம், உயிர்ரூட்டம் உள்ள வார்த்தைகளால் மன்றாடும்போது எமது குறிக்கோளை அடையலாம் என வேதம் சொல்கிறது.

மன்றாட்டின் மொழி: ஆச்சரியப்படக் கூடியதாக இருத்தல், புகழ்ச்சிப் பாமாலையாக பண்ணிசைத்தல் போன்றன இறைவனுக்கு உவப்பானதாகும். ஏனெனில் பல மொழிகளில் தூய ஆவியானவர் உங்களுடன் உரையாடுவார்.

எவ்வாறு நாம் ஏனையவர்கள் மன்றாடுகிறார்கள் என அறிந்து கொள்ளலாம்: இவர்களை நன்கு அவதானிக்கையில் இவர்கள் பரிசுத்தமானவர்களாகவும், இவர்களின் செயல்கள் பரிசுத்தமானதாகவும், இவர்களை ஏனையவர்கள் மதிப்பதின்மூலமும், தூய ஆவியானவரின் வழிநடத்தலில் இவர்கள் செயல்படுவதையும் நாம் காணமுடியும்.

நீ உனக்காக தனியே மன்றாடாது, பிறருக்காகவும், உன் பகைவர்களுக்காகவும் மன்றாடும்போது இறைவன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றான். மேற்கண்ட முறைகளில் மன்றாடும் போது நீ இறைவனுடன் ஒன்றித்தவனாக அப்பா, மகன் ஃ மகள் உறவுடன் திகழ்வதை உணர்ந்து கொள்வாய். “மானிடனே இதுவரை நீ இறைவனுடன் எவ்வாறு மன்றாடியுள்ளாய்”

தகவல்: பீற்றர் சின்கிளேயர்.

 

MANNAR DIOCESAN LAITY CATHOLIC PROFESSIONALS WITH HIS LORD SHIP OF BISHOPS AT KANDY AMPITIYA NATIONAL SEMINARY IN SEPTEMBER, 2011

MANNAR DIOCESAN LAITY CATHOLIC PROFESSIONALS WITH HIS LORD SHIP OF BISHOPS AT KANDY AMPITIYA NATIONAL SEMINARY IN SEPTEMBER, 2011

 

ELEVEN DIOCESAN   PROFESSIONALS GATHERED AT  KANDY AMPITIYA SEMINARY TO DISCUSS ON  VOCATION AND MISSION OF A CATHOLIC PROFESSIONAL IN TODAY’S SOCIETY

ELEVEN DIOCESAN PROFESSIONALS GATHERED AT KANDY AMPITIYA SEMINARY TO DISCUSS ON VOCATION AND MISSION OF A CATHOLIC PROFESSIONAL IN TODAY’S SOCIETY